என் மலர்

  நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது
  • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  கோவை,

  கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

  இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

  விசாரணையில் அவர்கள் கோவை நல்லாம்பாளையத்தில் தங்கி வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சுவைன் (வயது29), மிதுன் நாயக் (34) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுரேந்தர் மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார்.
  • சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  கோவை,

  சேலம் மாவட்டம் காட்டு குட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 23). இவர் கோவை வெள்ளமடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

  இது குறித்து கோவி ல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள காமாட்சி புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன். இவரது மனைவி பாக்கிய என்ற மேரி (52).

  சம்பவத்தன்று இவர் கோவை-மேட்டுப்பா ளையம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மேரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.
  • எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

  ராயக்கோட்டை,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி உள்ள அக்குபாய் கொட்டாயை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.

  இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நிலத்தில் அடிக்கடி காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் நிலத்தை சுற்றிலும் எல்லப்பன் மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் அந்த நிலத்திற்கு வந்த யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.

  இதையறிந்த எல்லப்பன் தனது மகன்களுடன் சேர்ந்து குழி தோண்டி யானையை புதைத்தார். இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.

  அதன்பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர்.அப்போது இரவு நேரமாகி விட்டதால் யானையின் உடலை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எல்லப்பனை போலீசார் கைது செய்தனர்.

  இதைத் தொடர்ந்து நேற்று காலை அங்கு ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

  அதேபோல கோவையில் இருந்து சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர்.

  தொடர்ந்து பொக்லைன் மூலம் குழி தோண்டி கிரேன் மூலமாக யானையின் உடல் மேலே எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

  இந்த பரிசோதனையின் முடிவில் யானை மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

  இதைத்தொடர்ந்து மின்வேலி அமைத்து யானையை கொன்ற குற்றத்திற்காகவும், யானையின் உடலை புதைத்து தடயத்தை அழித்த குற்றத்திற்காக விவசாயி எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப பிரச்சினையில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்த பாண்டி மனைவி கனிமொழி(25). கருத்துவேறுபாடு காரணமாக கனிமொழி கணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

  தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 11-வது வார்டை சேர்ந்த கண்ணன் மகள் பூஜா(19). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்றுவீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள காந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 37).டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல பதிப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

  ஆனால் குணமாக வில்லை. இதில் மனமுடைந்த சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதேபோல ஒசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த கோபால் (28) என்ற விவசாயி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மாரப்பன் தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இளம்பெண் கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.
  • அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

  கம்பம்:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 28). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள இரு சக்கர மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பணியை முடித்துவிட்டு உத்தமபாளையம் செல்வதற்காக அரசு போக்குவரத்து பணி மனை பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

  இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் ேபரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டியைச் சேர்ந்த குப்பு சின்னு (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோய்கொடுமையால் மனஉளைச்சலில் இருந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கூடலூர்:

  கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் முத்து (வயது37). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.

  இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராாஜேந்திரன் மனைவி மயில் (57). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார்.

  இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
  • லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது.

  கள்ளக்குறிச்சி:

  சங்கராபுரம் அருகே பகண்டைகூட்டுரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) மற்றும் அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (25) ஆகிய 2 பேரும் அரசராம்பட்டிலிருந்து மையனூர் காப்புக்காட்டு அருகே உள்ள சுரேஷ் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது ஒரு லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
  • இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

  ஈரோடு:

  ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.

  அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

  இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

  திருமங்கலம்

  பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

  அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது ஞான பிரகாசத்தின் கடைக்கு புகையிலை பொருட்களை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடம்இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
  • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது35). கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஓட்டன் முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.

  போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் கிருபாகரன் (வயது16). பூவத்தியை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

  இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • தகவலின் பேரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  காடையாம்பட்டி:

  சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அடுத்த பெரிய நாகலூர் தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 48). இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  இதேபோல் மாமரத்தூர் தின்னப்பட்டி பகுதி சேர்ந்தவர் ராணி (50). இவர் வீட்டில் மறைத்து லாட்டரி விற்றதாக கூறப்படுகிறது. இவரையும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.