search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17-th Starting"

    • தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது வடக்கு விஜயநாரயணம் ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில்.
    • விழாவில் வாண வேடிக்கைகள், வில்லிசை, நாதஸ்வரம், சென்டை மேளம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாரயணம் ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலும் ஒன்றாகும்.

    இந்த கோவில் கொடை விழா வருகிற 17-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) கால்நாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

    2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சியாக நடைபெறும் இந்த கோவில் கொடை விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரதான கொடைவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் ஒருங்கிணைப்பு குழு நடராஜன் கூறியதாவது:-

    வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா கால் நாட்டுடன் தொடங்குகிறது.24-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பிரதான கொடை விழா நடைபெறுகிறது.

    விழாவில் பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம் செல்கின்றனர். பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்புபுஷ்ப அலங்கார பூஜை, படப்புடன் கூடிய சாமக்கொடை நடக்கிறது.

    விழாவில் வாண வேடிக்கைகள், வில்லிசை, தஞ்சாவூர் குறவன், குறத்தி கரகாட்டம், கும்ப ஆட்டம், கொம்பு தப்பு, வாடிப்பட்டி மேளம், நாதஸ்வரம், சென்டை மேளம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    பக்தர்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி ( சனிக்கிழமை) அதிகாலை நடக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×