search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "114 அடி உயர கொடி"

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 114 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார். #DMK #MKstalin #DMKFlag
    சென்னை:

    தி.மு.க.வுக்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் அண்ணா அறிவாலயத்தில் நடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த கொடிக்கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 320 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தை செய்த நிறுவனத்திடம்தான் இந்த 114 அடி உயர கொடி கம்பம் செய்யும் பணியும் ஒப்படைக்கப்பட்டது.

    2 ஆயிரத்து 430 கிலோ எடை இரும்பினால் கம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 760 மி.மீ. விட்டம் கொண்டது. இந்த கொடிக்கம்பத்தை நிறுவுவதற்காக 12க்கு 12 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டி இயற்கை பேரிடரையும் தாங்கும் வகையில் கான்கிரீட்டினால் அடித்தளம் அமைக்கப்பட்டு கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.


    20 க்கு 30 அடி அகலத்தில் பிரத்யேகமாக இதற்காக தி.மு.க. கொடி புனேயில் தயாரிக்கப்பட்டது. வெயில், மழை, காற்றில் சேதம் அடையாதபடி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கொடிக்கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி, விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இரவிலும் ஒளிரும் வகையில் கொடிக்கம்பத்தில் ‘ஹைபீம்’ மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் தானாக எரிந்து அணையும்படி ‘டைமர்’ வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் மூலம் கொடி ஏற்றப்பட்டது. கொடி உச்சியை அடைவதற்கு 12 நிமிடங்கள் ஆனது. அதுவரை பேன்ட்-வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    கொடி மேலே செல்ல செல்ல 5 ஆயிரம் கருப்பு- சிவப்பு நிற பலூன்களும் கூடவே பறக்கவிடப்பட்டன.

    கொடி ஏற்றப்பட்டதும் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், தாயகம் கவி, எழும்பூர் ரவிச்சந்திரன், எம்.ஆர்.ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #DMK #MKstalin #DMKFlag
    தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. #Thailand #WirapolSukphol
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

    அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

    இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Thailand #WirapolSukphol #tamilnews
    ×