search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "000 கிலோ ஏலக்காய் விற்பனை"

    போடியில் நடைபெற்ற ஏலத்தில் 1,14,000 கிலோ ஏலக்காய் விற்பனை ஆனது.
    போடி:

    கேரள மாநிலம் குமுளி, வண்டன்மேடு மற்றும் கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஏலக்காய்களை போடி குரங்கனி சாலையில் உள்ள நறுமணபொருள் வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி இருப்பதால் ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு கொள்முதல் செய்கின்றனர். போடி நறுமணபொருள் வாரியத்தில் நடைபெற்ற ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், குமுளி, வண்டன் மேடு, டெல்லி, மும்பை, கொல்கத்தா பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சுமார் 1,14,000 கிலோ ஏலக்காய் விற்பனையானது. ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.1296 மற்றும் குறைந்தபட்ச விலையாக ரூ.929 நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்தனர்.

    மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களான மணிப்பால் உயர்கல்வி அகாடமி, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப விஞ்ஞான கழகம் (பிட்ஸ் பிலானி), ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1,000 கோடி வழங்குகிறது. கல்வியின் தரத்தை அதிகரித்து இந்த உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவில் உள்ள 800 பல்கலைக்கழங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட உலக அளவிலான தகுதி பட்டியலில் முதல் 100 இடங்களிலோ அல்லது முதல் 200 இடங்களிலோ இடம்பெறவில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 
    ×