என் மலர்

  நீங்கள் தேடியது "மே 17 இயக்கம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#May17movement #ThirumuruganGandhi
  சென்னை:

  சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் எனும் சமூக அமைப்பினை துவக்கினார். இந்த இயக்கத்தினை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கினார்.  இது தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் சமூக அமைப்பாகும்.  இந்த அமைப்பின் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #May17movement #ThirumuruganGandhi 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஆர்17 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #OppoR17  ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஆர்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, நாட்ச், 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 10 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் , இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

  புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  ஒப்போ ஆர்17 சிறப்பம்சங்கள்:

  - 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
  - ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 615 GPU
  - 8 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
  - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
  - 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா
  - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
  - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - VOOC ஃபிளாஷ் சார்ஜ்

  ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் நிறங்களில், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #OppoR17  #smartphone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்போ நிறுவனம் இந்தியாவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #OPPOR17Pro

   

  ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

  புது ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே, 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனினை 0.41 நொடிகளில் அன்லாக் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS, மற்றும் 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-40% சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் சார்ஜ் செய்த 40 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் 0-100% சார்ஜ் ஆகிவிடும்.  ஒப்போ ஆர்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  - 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
  - ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 616 GPU
  - 8 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
  - 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
  - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
  - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை டிசம்பர் 7ம் தேதி துவங்குகிறது.

  அறிமுக சலுகைகள்

  - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% கேஷ்பேக்
  - பேடிஎம் மால் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது
  - ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,900 மதிப்புள்ள 3200 ஜி.பி. கூடுதல் டேட்டா
  - ரூ.990 மதிப்புள்ள ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும் வசதி
  - வட்டியில்லா மாத தவணை முறை வசதி
  - பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. #OPPOR17Pro #smartphone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோசமான வானிலையால் 16 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டது. #Arunachalpradesh #ArmyChopper
  இடாநகர்:

  அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் 16 பேர் பயணம் செய்தனர்.

  இன்று மதியம் டுடிங் விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டரில் தகவல் தொடர்பு துண்டானது. மேலும் அங்கு நிலவிய மோசமான வானிலையால் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

  இதுதொடர்பாக விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டது. மதியம் அப்பகுதியில் நிலவிய மோசமான் வானிலையால் அந்த விமானம் டுடிங் விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 16 பேரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். #Arunachalpradesh #ArmyChopper
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ThirumuruganGandhi
  வேலூர்:

  மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

  கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.

  இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

  இதில் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

  இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து இன்று காலை திருமுருகன் காந்தியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக வார்டில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருமுருகன் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  #ThirumuruganGandhi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi
  சீர்காழி:

  நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

  இந்த கூட்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது திருவெண்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

  இந்த வழக்கு தொடர்பான விசாரணை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

  இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமுருகன் காந்தி சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

  அப்போது திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார்.

  பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் 161-வது பிரிவின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

  பா.ஜ.க.வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கு கருத்துரிமைக்கு எதிரானது. எனவே அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
  தஞ்சாவூர்:

  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜ.நா. மன்றத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் படுகொலைகள், எட்டு வழிச்சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், இப்பிரச்சனைகளில் ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.

  பின்னர் பெங்களூர் விமான நிலையத்தில் ஆக.9-ந்தேதி திருமுருகன் காந்தியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  ஜனநாயக மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து மனித உரிமைப் போராளிகள் அனைவரும் போராட வேண்டும். மேலும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆங்காங்கே மனித உரிமைப் போராட்டம் தொடரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், அரங்க குணசேகரன், திருநாவுக்கரசு, பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். #USBoatAccident
  நியூயார்க்:

  அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். எனவே, படகு விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

  இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #USBoatAccident
  ×