என் மலர்

  நீங்கள் தேடியது "தனுஷ் 34"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துரை செந்தில்குமார், ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இரு படங்களை அடுத்தடுத்து தயாரிக்க இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #DhanushWithSathyajyothi #Dhanush
  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

  இந்த நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படத்தையும், ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.


  இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுதவிர தனுஷ் வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன் படங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தான் இயக்கி நடிக்கும் பிரம்மாண்ட படம் என இந்த ஆண்டு தனுஷ் பிசியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீசாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #DhanushWithSathyajyothi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்புவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிம்பு அடுத்ததாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #STR34 #KarthikNaren
  வெங்கட் பிரபுவுடனான சந்திப்புக்கு பிறகு, சிம்பு சமீபத்தில் `துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்திருக்கிறார். 

  சிம்பு - கார்த்திக் நரேன் இடையேயான சந்திப்பின் போது கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், சிம்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக `நாடகமேடை' படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். `நாடகமேடை' படத்தின் பணிகள் தாமதமாகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் முதலில் சிம்புவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதுதவிர கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என அடுத்தடுத்து சிம்பு பிசியாக இருப்பதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

  எனவே சிம்புவின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' விரைவில் ரிலீசாக இருக்கிறது. #STR34 #KarthikNaren
  ×