என் மலர்

  நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சுப்பையா(74). இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

  சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மாலப்பட்டி ரோட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகா யமடைந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டக்குடி அருகே கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கினர்.
  • அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

  கடலூர்:

  திட்டக்குடி அருகே கோழியூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கோழியூர் கால்வாய் பாலம் அருகே பைக்கில் சென்ற நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இரும்புக்கம்பியை காட்டி மிரட்டியவாறு போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட் தூக்கியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை தொடர்ந்து திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கோழியூரை சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தராஜா (20) மற்றும் 19 வயது சிறுவன் என தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு முனுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
  • திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

  வடமதுரை:

  வடமதுரை அருகே கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீபதி(50). லாரி டிரைவர். கடந்த சில நாட்களாக நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொண்ணு(24). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் போதும்பொண்ணு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் அணைப்பட்டி பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (வயது31). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ பைனான்ஸ் தொழில் பார்த்து வந்த முருகன் குடி பழக்கத்துக்கு அடிமை யானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்து ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (57). இவரது மகன் ஆறுமுகத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது
  • வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

  திருச்சி :

  திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 11 எண்ணிக்கையிலும், ஒரு செல்போன் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
  • இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

  அரியலூர்:

  அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், தா.பழூர் -சுத்தமல்லி சாலையில் இருந்து கார்குடி பிரிவு சாலையில் வந்தபோது, அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

  அந்த வண்டிகளை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கடத்தி வந்தது தெரியவந்தது.

  இது குறித்து தா.பழூர் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
  • போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  கொண்டலாம்பட்டி:

  சேலம் பள்ளப்பட்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு பிரபு (வயது 28) என்ற வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி செல்ல முயன்றனர்.இதைக் கண்ட பிரபு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 வாலிபர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாமக்கல் மாவட்டம் பட்ட ணம் அருகில் உள்ள பர மேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் செல்வ ராஜ் (20) மற்றும் சிட்டிபாபு மகன் அர்ஜூன் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 25 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

  ரெயில் மோதியது

  அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்தவர் மா நிறம் உடையவர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட் லைட் பச்சை கலர் ஷர்ட் அணிந்துள்ளார்.

  2 பேர் பலி

  மேலும் அதேபோல வளத்தூர் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்கவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  இறந்தவர் மாநிறம் உடையவர் இவர் நீல கலர் லுங்கி அணிந்துள்ளார். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டிவனத்தில் மொபைல் போன் கடையை சூறையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மொபைல் போனுக்கான உபகரணங்கள் இல்லை என கடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

  விழுப்புரம்:

  திண்டிவனம் பெலாக்குப்பம் ரோடு, வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகுமார். இவர், திண்டிவனத்தில் மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சலவாதியைச் சேர்ந்த திகில் என்கிற ஜெகதீசன், மொபைல் போனை சர்வீசுக்கு எடுத்துச் சென்றார். அப்போது, அந்த மொபைல் போனுக்கான உபகரணங்கள் இல்லை என கடையில் இருந்தவர்கள் கூறியு ள்ளனர். இதனால் ஆத்திரம டைந்த திகில் கடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது ஆதரவாளர்கள் மணிகண்டன் மற்றும் 5 பேருடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து, கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பியோடினர். ரேணுகுமார் அளித்த புகாரின் பேரில், சஞ்சீவிராயன்பேட்டை மணிகண்டன், கசாமியன் தெருவைச் சேர்ந்த ஆசிப் பாஷா, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திகில் மற்றும் அடையாளம் தெரியாத சிலரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரில் அதிவேகமாக சென்ற வாலிபர்களை பொதுமக்கள் திட்டியதால் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
  • போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானல் நகரின் முக்கிய சுற்றுலா தலங்களில் வெளியூர் நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிக வேகத்தில் செல்வது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக மோட்டார் பைக்கில் வரும் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டு செல்பி எடுத்து கொள்வதும், விபத்தில் சிக்கி வருவதும் நடப்பதுண்டு.

  பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை கண்டித்தாலும் இப்பிரச்சினை ெதாடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த பகத் மற்றும் விஷ்ணு ஆகிய 2 பேர் அதிவேகமாக பஸ்நிலையத்தில் காரில் வந்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அச்சத்தில் மிரண்டு ஓடினர். பொதுமக்கள் சத்தம் போடவே அவர்களை பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

  அது ெபாம்மை துப்பாக்கி என தெரியாததால் பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். வியாபாரிகள் அவர்களை சுற்றிவளைத்து கொடைக்கானல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
  • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

  ஈரோடு:

  ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

  இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

  தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

  ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • தனிப்படை போலீசார் நடவடிக்கை

  புதுக்கோட்டை:

  ஆலங்குடி அருகே உள்ள இச்சடி மாதா மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலம் விற்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவரின் உத்தரவு படி விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது எஸ் மேலப்பட்டி செம்பட்டிவிடுதியைசேர்ந்த அற்புதசாமி மகன் மரியசூசை (வயது 24) இவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதே போல் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வடவாளம் முக்காணிபட்டியைசேர்ந்த அருளாந்து மகன் ஆரோக்சியசாமி ஆகியோரை பிடித்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

  ×