என் மலர்
நீங்கள் தேடியது "ஆலங்குளம் 6 பேர் கைது"
- பெரும்பாறையில் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து அப்பகுதி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
- இலவ மரங்களை வெட்டியதால் சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது விழுந்து சேதமடைந்தன.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் ராணி, சுரேஷ், ஒச்சம்மாள், அரசுமாயன், வெங்க–டாசலம், பட்டறராணி ஆகிய 6 பேரும் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்த பகுதியில் பேயத்தேவர் மனைவி ராணி என்பவர் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்.
இந்த தோட்டத்தில் இலவ மரங்களை வெட்டி சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது சாய்த்துள்ளனர்.
இதனால் கடைகள் அனைத்தும் நொறுங்கி பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தாண்டிக்குடி போலீசில் தோட்ட உரிமையாளர் ராணி மீது சுரேஷ் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜங்சன் மேம்பாலப் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
- அண்ணாமலை கனவு காண யாரும் தடை போட முடியாது
திருச்சி :
திருச்சி மாநகரம் முதலியார் சத்திரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டியை திருச்சி மக்களவைத் தொகுததி உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாள ர்களிடம் கூறியது: தடைபட்டுள்ள திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிலும் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுளளார். அவர் கனவு காண யாரும் தடை போட முடியாது. ஆனால் அது யதார்த்தத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தர்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி, மதம் இவற்றால் மக்களை பிளவுப்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது.
வரம்பு மீறாமல் நாகரிகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும் என்றார்.
- வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கரூர்:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர் மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து உள்ளது.
இந்தநிலையில் சக்திவேல் மனைவி கோவிந்தம்மாள், அவருடைய உறவினர்களான சேலத்தை சேர்ந்த திவ்யா, தங்கமணி, பெரியசாமி, ஏழுமலை, செந்தில் ஆகிய 6 பேர் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை தகாதவார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியன் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் காவிரி ஆறு வழியாக செல்கிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான சரவணன், அவரது மனைவி ஜோதி மணி மற்றும் அவரது மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தரகேஷ் உள்பட 6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மணல் அள்ளிய பள்ளத்தில் எதிர் பாராதவிதமாக அவர்கள் சிக்கி கூச்சல் இட்டனர். இதை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால் 6 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த பரமத்திவேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சரவணன், ஜோதிமணி, மற்றொரு பெண்ணின் உடலையும் மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.





கொழும்பு:
இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர். #SriLankaFiring