என் மலர்

  நீங்கள் தேடியது "கே.டி.எம். 125 டியூக்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய 125 சிசி பைக் விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #KTM #Duke
  கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் புதிய 125 டியூக் நேக்கட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் விவரங்களின் படி கே.டி.எம். 125 டியூக் நேக்கட் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் மும்பையில் துவங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  புதிய 125 டியூக் மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விலையை பொருத்த வரை டியூக் 125 விலை அதிகபட்சம் ரூ.1.60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

  கே.டி.எம். 125 டியூக் மாடல் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 125 டியூக் மாடல் இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் கே.டி.எம். 125 டியூக் மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய கே.டி.எம். 125 டியூக் ஒட்டுமொத்த வடிவமைப்பு 1290 சூப்பர்டியூக் மாடலை தழுவி உருவாக்கப்படலாம் என்றும் இந்த மோட்டார்சைக்கிள் பார்க்க புதிய 390 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் கே.டி.எம். 125 டியூக் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், டி.எஃப்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

  கே.டி.எம். 125 டியூக் மாடலில் 124.7 சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலின்டர், ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.7 பி.ஹெச்.பி. பவர், 11.80 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. கே.டி.எம். 125 டியூக் இந்தியாவில் கிடைக்கும் சக்திவாய்ந்த 125 சிசி மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

  ஏற்றுமதி செய்யப்படும் கே.டி.எம். 125 டியூக் மாடலின் முன்பக்கம் 43 எம்.எம். WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP  மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் போஷ் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. #KTM #Duke 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான கே.டி.எம். இந்தியாவில் 125 டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #KTM  கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் இணையத்தில் வெளியாகி இருக்கும் விவரங்களின் படி கே.டி.எம். 125 டியூக் நேக்கட் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கே.டி.எம். 125 டியூக் மாடல் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 125 டியூக் மாடல் இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் கே.டி.எம். 125 டியூக் மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  புதிய கே.டி.எம். 125 டியூக் ஒட்டுமொத்த வடிவமைப்பு 1290 சூப்பர்டியூக் மாடலை தழவி உருவாக்கப்படலாம் என்றும் இந்த மோட்டார்சைக்கிள் பார்க்க புதிய 390 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் கே.டி.எம். 125 டியூக் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், டி.எஃப்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.  கே.டி.எம். 125 டியூக் மாடலில் 124.7 சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலின்டர், ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.7 பி.ஹெச்.பி. பவர், 11.80 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. கே.டி.எம். 125 டியூக் இந்தியாவில் கிடைக்கும் சக்திவாய்ந்த 125 சிசி மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

  ஏற்றுமதி செய்யப்படும் கே.டி.எம். 125 டியூக் மாடலின் முன்பக்கம் 43 எம்.எம். WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP  மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் போஷ் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தனது அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  புதுடெல்லி:

  சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் 125 சிசி அக்சஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

  புதிய சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (Combined Braking System -CBS) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டாலிக் சோனிக் சில்வர் எனும் புதிய நிறத்தில் சுசுகி 125 அக்சஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறத்துக்கு ஏற்ப லெதர் சீட்களும் புதிய நிறம் பெற்றிருக்கிறது.

  புதிய நிறம் மட்டுமின்றி ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் சில அப்டேட்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் கருப்பு நிற அலாய் வீல், கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் மிரர் மற்றும் ஸ்பெஷல் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

  இதன் சிபிஎஸ் யூனிட் மற்ற போட்டி வாகனங்களில் உள்ளதை போன்றே இயங்குகிறது. இரண்டு பிரேக்களிலும் சிறப்பாக வாகனத்தை நிறுத்த சிபிஎஸ் யூனிட் வேலை செய்கிறது. இத்துடன் வாகனம் கட்டுப்பாடு இழக்கச் செய்யாமல் இருக்க கன்ட்ரோல்டு பிரேக்கிங் சிஸ்டம் உதவும்.  சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள் சிலின்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.5 பிஹெச்பி மற்றும் 10.2 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டிருக்கும் புதிய ஸ்கூட்டரில் பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் செமி-டிஜிட்டல் கன்சோல், சென்ட்ரல் லாக் சிஸ்டம், அலாய் வீல்கள், ஆப்ஷனல் டிசி சாக்கெட், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிக்கிறது.

  இந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 சிபிஎஸ் வேரியன்ட் விலை ரூ.59,980 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் ஸ்பெஷல் எடிஷன் அக்சஸ் 125 விலை ரூ.60,580 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×