என் மலர்

  நீங்கள் தேடியது "டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டுகாட்டி நிறுவனத்தின் 959 பேனிகேல் கார்ஸ் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #ducati  இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி இந்தியாவில் 959 பேனிகேல் கார்ஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலின் விலை ரூ.15.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலாகும். இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் பேனிகேல் கார்ஸ் மாடல் டுகாட்டி கார்ஸ் மோட்டோ ஜிபி நிறங்களை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய நிறத்தில் 959 பேனிகேல் கார்ஸ் ஸ்போர்ட் தோற்றத்தில் அசத்துகிறது.

  டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலில் 955சிசி சூப்பர்குவாட்ரோ இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 157 பி.ஹெச்.பி. பவர் @ 10,500 ஆர்.பி.எம். மற்றும் 107.4 என்.எம். டார்கியூ @ 9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர்பைக் மாடலில் மேம்படுத்தப்பட்ட சேசிஸ் மற்றும் தலைசிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.  இத்துடன் டூயல்-சேனல் போஷ் ஏ.பி.எஸ்., டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல், டுகாட்டி குவிக் ஷிஃப்ட், இன்ஜின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ரைடு-பை-வையர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  புதிய 959 பேனிகேல் கார்ஸ் மாடலில் ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரைடிங் மோடும் வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எலெக்டிரானிக்ஸ் செட்டிங்களை மாற்றக்கூடிய வசதிகளை வழங்குகிறது. 

  எனினும் இந்திய அம்சத்தை பொருத்த வரை ஒலின்ஸ் சஸ்பென்ஷன், லித்தியம் பேட்டரி, ஒலின்ஸ் ஸ்டீரிங் டேம்ப்பர் மற்றும் டுகாட்டி பெர்ஃபார்மேன்ஸ் டைட்டானியம் சைலன்சர் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

  இந்தியாவில் டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலை வாடிக்கையாளர்கள் சென்னை, டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சின் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும்.
  ×