என் மலர்

  நீங்கள் தேடியது "பி.எம்.டபிள்யூ. 220ஐ பிளாக் ஷாடோ எடிஷன்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்தது.


  பி.எம்.டபிள்யூ. குழுமம் இந்திய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 220ஐ பிளாக் ஷேடோ எடிஷன் விலை ரூ. 43.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

  இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரின் விலை எம் ஸ்போர்ட் லைன் வேரியண்டை விட ரூ. 1.6 லட்சம் அதிகம் ஆகும். இதன் ஆல்பைன் வைட் மற்றும் பிளாக் சபையர் நிற வேரியண்ட்கள் மொத்தத்தில் 24 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

   பி.எம்.டபிள்யூ. 220ஐ பிளாக் ஷாடோ எடிஷன்

  பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 பி.ஹெச்.பி. திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் குரூஸ் 220 மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #Avenger220Cruise  பஜாஜ் நிறுவனம் காலத்துக்கேற்ப மோட்டார்சைக்கிளில் மாற்றங்களை புகுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. தற்போது தனது இரண்டு மாடல் மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதியை புகுத்தி சந்தையில் புதிதாக களமிறக்கியுள்ளது. 

  இந்நிறுவனத்தின் பிரபல மாடலான அவெஞ்சர் ஸ்டிரீட், குரூயிஸ் 220 ஆகிய இரு மாடல்களிலும் இப்போது ஏ.பி.எஸ். (ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) புகுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிதாக தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்நிலையில், பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 ஏ.பி.எஸ். மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.பி.எஸ். தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.  பஜாஜ் அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் மாடல் ஸ்டிரீட் 220 என்றும் மற்றொரு மாடல் குரூஸ் 220 என அழைக்கப்படுகிறது. 

  ஆரம்ப நிலை குரூயிஸ் மோட்டார்சைக்கிளில் இது கட்டுபடியாகும் விலையில் உள்ள ஒரே மாடலாகும். 220சிசி திறன் கொண்ட இரு மாடல்களிலும் 220 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 19 ஹெச்.பி. திறனை 8,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 17.5 என்.எம். டார்க் @7,000 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.

  புகைப்படம் நன்றி: Overdrive
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் விலையை அறிவித்தது. #bajaj #Pulsar  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

  பஜாஜ் பல்சர் 220எஃப் ஏ.பி.எஸ். வெர்ஷன் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது. இந்தியாவில் புதிய பல்சர் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஏ.பி.எஸ். வசதியில்லாத மாடலின் விலையை விட ரூ.7,600 வரை அதிகம் ஆகும்.  பஜாஜ் பல்சர் 220 எஃப் இந்தியாவில் பிரபலமான என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் மாடலாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் கிராஷ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

  புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.9 பி.ஹெச்.பி. பவர், 18.5 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

  பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது. 
  ×