என் மலர்

  நீங்கள் தேடியது "நாய்ஸ் எக்ஸ் பிட் 1"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ் 1ல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
  • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தொழிற்கல்வி பாடப்பிரிவு முடிவு.

  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  அதன்படி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பிறப்பித்த உத்தரவில் 9 அரசு பள்ளி களில் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட வேண்டும். அவற்றில் மாணவர்களை சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் ஏற்கனவே மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த சேர்க்கையை ரத்து செய்து மாணவர்களை வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சங்கரன்கோவில், குருவி குளம், தென்காசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம், புளியங்குடி, புல்லுக்காட்டு வலசை, கரிவலம் வந்த நல்லூர், திருமலாபுரம், ஆய்குடி ஆகிய பள்ளிகளில் அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங், வேளாண்மை, அறிவியல், டெக்ஸ் டைல்ஸ் போன்ற தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுகின்றன.

  ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும் இந்த கல்வி ஆண்டில் சிலர் ஓய்வு பெறுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் 11 தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி அரசு பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  மேலும் 9-ம் வகுப்பில் அறிமுகம் செய்த தொழிற்பிரிவு பாடங்களையும் ரத்து செய்திருப்பதாக தகவல் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொழிற்கல்வியில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் ரத்து செய்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  ஈரோடு:

  தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.

  இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.

  இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

  தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
  • இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  ஈரோடு:

  தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

  இதைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.

  இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,913 மாணவர்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4756 மாணவர்கள், 6475 மாணவிகள் என மொத்தம் 11,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.43, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 என மொத்த தேர்ச்சி விகிதம் 87.01 சதவீதமாகும்.

  பிளஸ்-1 பொதுத்தேர்வை 78 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 67 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

  மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போ னுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.

  இன்னும் 4 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
  • அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.

  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

  கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.

  மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
  • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

  இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

  இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

  இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


  நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப் உள்ளது.

  இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கிறது. மெட்டல் பினிஷ் கொண்டிருக்கும் நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 மாணிட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். 

   நாய்ஸ் எக்ஸ் பிட் 1

  புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் பிட்1 சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரு ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு பற்றி அந்நிறுவனம் புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெஸ்ட் ரைடு திட்டத்தை இம்மாதம் துவங்கியது. எனினும், தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே டெஸ்ட் ரைடு நடைபெற்று வந்தது. 

  இந்த நிலையில், நாடு முழுக்க ஆயிரம் நகரங்கள் மற்றும் டவுன்களில் டெஸ்ட் ரைடு திட்டத்தை நீட்டிக்க இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன டெஸ்ட் ரைடு திட்டமாக இது அமைகிறது.

   ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

  முன்னதாக ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இரு ஸ்கூட்டர்களுக்கான வினியோகம் இம்மாதமே துவங்க இருக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தரையில் இருந்து விண்ணுக்கு சென்று இலக்கை தாக்கும் ஆகாஷ் 1எஸ் ஏவுகணை இன்று மீணடும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
  புதுடெல்லி:

  தரையில் இருந்து விண்ணில் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஏ) தயாரித்துள்ளது. குறுகிய தொலைவு பாயும் இந்த ஏவுகணையானது ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சூழ்நிலையிலும் இந்த ஏவுகணைகளை செயல்படுத்த முடியும். 

  அவ்வகையில் உள்நாட்டு சீக்கர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் 1எஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்ப்போம். #Plus1Result
  சென்னை:

  11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2,636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.  இந்த தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

  அறிவியல் பாடப்பிரிவுகள் - 93.9%
  வணிகவியல் பாடப்பிரிவுகள்- 97.4%
  கலைப்பிரிவுகள் - 95.1%
  தொழிற்பாடப்பிரிவுகள்- 92.3%.

  முக்கிய பாடங்களில் தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

  இயற்பியல் - 94.6%
  வேதியியல்- 95.7%
  உயிரியல் - 97.1%
  கணிதம் - 96.9%
  தாவரவியல் - 91.1%
  விலங்கியல்- 93%
  கணினி அறிவியல் - 98.2%
  வணிகவியல்- 97.7%
  கணக்குப்பதிவியல் - 97.7%

  பள்ளிகள் வகைப்பாட்டு வாரியான தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

  அரசுப்பள்ளிகள்- 90.6%
  அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 96.9%
  மெட்ரிக் பள்ளிகள்- 99.1%
  இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்-96.8%
  பெண்கள் பள்ளிகள்- 96.8%
  ஆண்கள் பள்ளிகள்- 90.2% #Plus1Result

   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமியின் போகோ பிராண்டு எஃப்1 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.2000 குறைக்கப்படுகிறது. #PocoF1  சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விலை நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. அதன்படி போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை குறுகிய காலத்திற்கு குறைக்கப்படுகிறது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

  தற்சமயம் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ அறிவித்திருக்கும் ரூ.2000 தள்ளுபடி மார்ச் 25 ஆம் தேதி முதல் துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

  இந்த தேதிகளில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை வழக்கமான விலையில் விற்பனை செய்யப்படும். முன்னதாக 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.   போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. சிறப்பு விற்பனையின் போது போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  சியோமியின் துணை பிராண்டு போகோ இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.23,999 விலையில் அறிவிக்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக், ரோஸோ ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் பின்லாந்து வீரர் போட்டாஸ் முதலிடம் பிடித்தார். #ValtteriBottas #FormulaOneOpen
  மெல்போர்ன்:

  உலகின் மிகப்பெரிய கார்பந்தய போட்டியான பார்முலா 1 கார்பந்தயம் இந்த ஆண்டு 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளி வழங்கப்படும். ரேசின் போது ஒரு சுற்றை அதிவேகமாக கடக்கும் வீரருக்கு போனசாக ஒரு புள்ளி வழங்குவது இந்த முறை புதிதாக அறிமுகம் ஆகிறது. 21 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் குவிக்கும் வீரர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார்.

  இந்த சீசனுக்குரிய முதலாவது சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி, மெல்போர்ன் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். பந்தய தூரமான 307.574 கிலோமீட்டர் இலக்கை பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 25 நிமிடம் 27.35 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். அத்துடன் குறிப்பிட்ட சுற்றை வேகமாக கடந்த வகையில் அவர் மொத்தம் 26 புள்ளிகளை தட்டிச் சென்றார்.  5 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) அவரை விட 20.886 வினாடி மட்டுமே பின்தங்கி 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பான் (ரெட்புல் அணி) 3-வது இடத்தையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 4-வது இடத்தையும் பிடித்தனர். விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 வீரர்கள் பாதியிலேயே விலகினர்.

  பார்முலா1 பந்தய இயக்குனர் சார்லி ஒயிட்டிங் (இங்கிலாந்து) உடல்நலக்குறைவால் 3 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக 29 வயதான போட்டோஸ் கூறினார். 2-வது சுற்று போட்டி பக்ரைனில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram