என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்"
- ரூ.20 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வந்தனர்
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வழி நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வெளி நாடுகளுக்கு வியாபார காரணங்களுக்காக சென்று வருவதாக கூறி அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவது மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த நாடுகளில் உள்ள தரகர்கள மூலமாகவும் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள்,
அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் எடுத்து வந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து ரூ 20 லட்சம் மதிப்பிலான 20 துண்டுகளாக கொண்டுவந்த 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் மேலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
போதிய இட வசதி இன்மையால் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ வசதி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேபோல் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த டாஸ்மாக் கடைகளை இடம்மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி நகர முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரியும்,
போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், சீனி கடைமுக்கம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற கோரியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.




பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ், மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்திய வீராங்கனைகளுடன் வெளிநாட்டினரும் இடம் பெற்றுள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய 500, 2000, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான மாதிரி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது.
புதிய 20 ரூபாய் நோட்டு பச்சை, மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். அதில் மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்தும் இடம்பெறும். நோட்டின் மறுபக்கம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் எல்லோரா குகைக்கோவில் தோற்றம் இடம் பெறுகிறது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது. #RBI #20Rupees #Denomination
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
முதலில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறிக்கிட்டது.
அதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபெற்றது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது இலங்கை அணி 17 ஓவரில் 183 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 35 பந்தில் 72 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கோடு இலங்கை களம் இறங்கியது.
இலங்கை அணி 15.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.