என் மலர்

  நீங்கள் தேடியது "பிஎஸ்எல்வி சி46 ராக்கெட்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்.
  சென்னை:

  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது.  பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரீசாட்-2பி செயற்கைக்கோள் பயன்படும்.  ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

  இந்நிலையில் விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்.  புவி சுற்றுவட்டப்பாதையில்  செயற்கைக்கோளை  பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
  சென்னை:

  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது. பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரீசாட்-2பி செயற்கைக்கோள் பயன்படும்.  ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

  இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது.

  விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் ‘கேலரி’ அமைக்கப்பட்டு இருந்தது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்து உள்ளனர்.

  இந்த ‘கேலரி’, ஏவுதளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்வையாளர்களால் ஏவுதளத்தை பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 22-ந்தேதி விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
  சென்னை:

  விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையிலும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வருகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  கடந்த ஏப்ரல் 1-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதை பார்வையிட முதன் முறையாக 1000 பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கியது.

  இதற்காக இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மறறும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் ஆகியவற்றை கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.

  வருகிற 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான முன் பதிவை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதை பார்ப்பதற்கு 1000 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.  விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி காலை 5.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது.

  இந்த ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைகோள் புவியில் இருந்து 555 கி.மீ. தொலைவில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

  இந்த செயற்கைகோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புகைப்பட சாதனங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ரேடார் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பூமியை தெளிவாக படம் பிடித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.

  இந்த செயற்கைகோள் இரவிலும், பகலிலும் மட்டுமல்லாது வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்போது கூட பூமியின் பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்புவதற்காகவே விண்ணில் செலுத்தப்படுகிறது.

  ×