என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- சக்திவேல் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- இருவரையும் போலீசார் கைது செய்து, 475 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கெளாபாறை, பையர்நா யக்கன்பட்டி கிராமங்களில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உத்தரவின்படி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கெளாபாறை கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி மகன் சின்னராஜ் (வயது 75), பையர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் தீர்த்தகிரி (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, 475 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.
- டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.
- இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கோவை
மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் லால் என்ற சபீர் அகமது (வயது35), வ.உ.சி நகர் சந்தை கடை பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் சுல்தான் (35). கூலி தொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் மைதானம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.
அப்போது அங்கு மது அருந்திய பின் டாஸ்மாக் பாரில் உணவு பதார்த்தங்கள் கேட்டு அங்கு பணியில் இருந்த சிங்கதுரை என்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிங்கதுரை மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
- பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவைபழைய சுங்கம் அருகே உள்ள அகஸ்டின் பேட்டையை சேர்ந்தவர் மணி (வயது 77).
சம்பவத்தன்று இவர் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள திருச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மணி மீது ேமாதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த மணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி அருகே உள்ள பாலகணேசபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (57).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி - லிங்கனூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ரங்கராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிய ரங்கராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தள்ளுவண்டியில் செருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள உப்பு மண்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 20). தங்க நகை தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தான் வேலை பார்க்கும் கடையில் பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது கடைக்குள் வைசியாள் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணிகண்டன் (19), சஞ்சய் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கடையில் இருந்த விஜயை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500 பணத்தை பறித்து தப்பி ஓடினர்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து விஜய் பெரியக்கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க நகை தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த கல்லூரி மாணவர் சிவ மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நவநீதன் (32). இவர் தள்ளுவண்டி செருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் ரோட்டில் செருப்பு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தள்ளுவண்டியில் இருந்து ரூ.450 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த நவநீதன் அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார்.
பின்னர் அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அஜீஸ் (37) என்பது தெரிய வந்தது.
போலீசார் இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.
- வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாண்டியன் குப்பம் கல்லாநத்தம் தகரை, காட்டனத்தல், கிராமங்களில் சின்னசேலம் போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொது கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா (வயது 37) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.
அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ராஜா மீது வழக்கு பதிவு செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் காட்டனத்தல் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரின் மனைவி சிவகாமி (38) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கினர்.
- ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.
ஈரோடு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் ரூ.1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. வரும் 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற கூட்ட நெரிசலை தவிர்க்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வீடு, வீடாக சென்று அக்கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதில் பரிசு தொகுப்பு பெற வர வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிக்கின்றனர்.
இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கினர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகி ஜான் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 7 லட்சத்து 65,845 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் அரிசி கார்டு தாரர்கள் 7 லட்சத்து 47,474 பேர் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கம் வகையில் நேற்று முதல் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்கள் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.
முதல்-அமைச்சர் வினியோகத்தை தொடங்கி வைத்த பின் இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் பிடிக்க சென்றபோது, சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.
- ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
கடலூர்:
விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சின்னபொண்ணு. ,அதே பகுதியைச் சேர்ந்த ராஜச்சந்திரன், என்பவரது வீட்டின் அருகேஉள்ள மினி டேங்கில் தண்ணீர் பிடிக்க சென்றார்.அப்போது, ராஜசந்திரன் அவரது ஆதரவாளர் மனோகர், ஆகியோர் சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.இதுகுறித்தபேரில்,புகாரி ன்ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரூர்,
அரூர் அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பள்ளிப்பட்டி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேரளா லாட்டரி, மற்றும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக தருமபுரி பகுதியை சேர்ந்த நக்கீரன் மகன் மோகன் (வயது 24), அரூர் பகுதியைச் சேர்ந்த ரஹீம் அப்துல்லா மகன் இனாயதுல்லா (வயது 54) ஆகிய இருவரையும் சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1000 பணம், இரண்டு செல்போன்கள், லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
- மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
- இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45).
இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து தங்கவேல் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கவேல் வீட்டில் கைவரிசை காட்டியது சேகர் (எ) சொட்ட சேகர், குமார் (எ) புட்டன் குமார் என்பது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.
- ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
- நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நோமல் திமாரி (வயது 29) .இவர் தனது உறவினர்கள் சிலருடன் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முஹம்மத் இஸ்மாயில் என்பவருடன் பெங்களூரு-ஓசூர் சாலையில் ஜுஜுவாடி அருகேயுள்ள வங்கி ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் மோதி விட்டார்.
இதில் நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் வந்த முஹம்மத் இஸ்மாயில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலிசார்விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள முதுகம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் மோட்டார் சைக்கிளில் முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு தருமபுரி அருகே வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோர் சந்தேகப் படும் வகையில் 5 பைகளை வைத்திருந்தனர்.
ரெயில்வே போலீசார் கைபைகளை சோதனை செய்த போது அதில் பான்பராக் மற்றும் குட்கா ,புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீ சார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
- பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்
பவானி,
பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.