என் மலர்

  நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் மாயமாகினர்
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  உத்தமபாளையம்:

  உத்தமபாளையம் எஸ்.ஏ.பி பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வினோத்குமார்(28). இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரை யாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றஅவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை தேடி வருகின்றனர்.

  ராயப்பன்பட்டி காம ராஜர் காலனியை சேர்ந்த வர் மகேஸ்வரன் மகள் சரண்யா(16). இவரது தாய் கூலிவேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீடு திரும்பிய போது சரண்யா மாயமாகிஇருந்தார்.

  பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பவானி திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
  • போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பவானி:

  பவானி குட்ட முனிய ப்பன் கோவில், கூத்தம்பட்டி பகுதியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்தின் அருகில் உள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

  இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் அவர் பவானி, திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு (45) என்பதும் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து சிங்காரவேலுவை போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

  அதேபோல், பவானி அருகில் உள்ள எலமலை கிராமம், குள்ளம்பாறை பகுதியில் சித்தோடு போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குள்ளம் பாறை பகுதியில் மறைவான இடத்தில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி‌ (73) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து 7 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உத்தமபாளையத்தில் லாட்ஜூக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சி.சி.டி.வி. கேமரா அடிப்படையில் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த போது இருவரையும் சுற்றி வளைத்தனர்.

  உத்தமபாளையம்:

  திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சை முத்து மகன் சிவப்பாண்டி (வயது 34). இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உத்தம பாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தார்.

  இதே லாட்ஜில் கேரளாவைச் சேர்ந்த வேறு சில ஊழியர்களும் தங்கி இருந்தனர். அப்போது சிவ பாண்டி அறையின் கதவை தட்டுவது போல் சத்தம் கேட்கவே அவர் எழுந்து கதவைத் திறந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த 2 வாலிபர்கள் அவர்களை சரமாரியக தாக்கி பணம் ரூ.10,000 மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். இதனை தடுக்க முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபு அலி (27) என்பவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

  இது குறித்து உத்தம பாளையம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டது. இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் மற்றும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். சி.சி.டி.வி. கேமரா அடிப்படையில் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த போது இருவரையும் சுற்றி வளைத்தனர்.

  போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது கோவை மாவட்டம் நீலிக்கோணம்பாளையம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜவசந்த், நெல்லை மாவட்டம் பணகுடி புளிமர ஸ்டாப் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் சங்கர் (24) ஆகியோர்தான் இதில் ஈடுபட்டது என தெரிய வந்தது. இதனைத் தொ டர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் திடீரென மாயமானார்.
  • போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருக பாண்டி மனைவி ர ாஜகு மாரி (வயது 58). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

  சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற ராஜகுமாரி மாயமானார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

  தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திபிரியா (15). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர்.
  • விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

  அந்தியூர்:

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்படுவதாக பர்கூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதனை அடுத்து பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூர் தோஸ்த்து வாகத்தில் இருந்து சோளம்லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது.

  சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

  அப்போது அந்த வாகனத்தில் தடை செய்ய ப்பட்ட பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து அவர்களிடம் இருந்து ஆன்ஸ் 35 மூட்டை, விமல் பாக்கு 15 மூட்டை, வி.ஐ. டோபோகோ 3 மூட்டை, ஆர்.எம்.டி. 2 பாக்ஸ் உள்பட போதை பொருட்கள், சரக்கு வாகனம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதையடுத்து போலீசார் பவானி அந்தியூர் பிரிவு பகுதி சேர்ந்த அருண் (36), மற்றும் கொள்ளேகால் மாவட்டம் சாம்ராஜ்நகர் ராமாபுரம் கோபிசெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய பேரையும் போலீசார் கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விபரீத முடிவு எடுத்தனர்.
  • 2 போலீஸ்நிலையங்களில் விசாரணை நடக்கிறது

  கோவை

  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்தாஸ் ( வயது 49). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி அங்குள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று அவரது மனைவி சம்பள பணத்தை அனுப்புமாறு கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக்தாஸ் தான் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தீபக் தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆட்டோ டிரைவர்

  இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன்(39). ஆட்டோ டிரைவர்.

  சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜலாலுதீன் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது பாக்கியராஜ், சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

  அரியலூர் ;

  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 34), சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதன், ராஜகுரு நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
  • அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

  புதுக்கோட்டை :

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கம்பசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 26) தனியார் பேருந்து நடத்துனர், ராஜகுரு (23) கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு, ராஜகுரு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகுடி போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுதுது சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  திருச்சி:

  மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 30-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனம் திருட்டுபோனது. இதுகுறித்து சரவணன் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனம் பதிவு எண் அகற்றப்பட்டு நிற்பதை, சரவணன் கண்டார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த குமரபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் விசாரித்தபோது, அந்த வாகனத்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், வாகனத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட வந்ததாகவும் கூறியுள்ளார்.

  இது பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்த சரவணன், செல்வத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முருகேசனை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  இதையடுத்து முருகேசனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இருசக்கர வாகனங்களை வட்டிக்கு அடகு வாங்கும் தொழில் செய்து வருவதாகவும், அங்கு நிற்கும் வாகனங்களை அடகு வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்களை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், செல்வம் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னமாடசாமி. (வயது 32). இவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னமாடசாமி விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (43). மாற்றுத் திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தெய்வேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

  அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
  • மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பவானி:

  பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

  அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.

  அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
  • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு கருங்கல் பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

  அப்போது அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

  மேலும் விசாரணையில் ஒருவர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (20), மற்றொருவர் சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியை சேர்ந்த குமார்(19) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

  இதையடுத்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

  ×