என் மலர்

  நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
  • இப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

  ஜென்டில்மேன்-2

  ஜென்டில்மேன்-2


  இந்நிலையில் 'ஜென்டில்மேன்-2' படத்தின் இயக்குனர் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை 2014-ஆம் ஆண்டு நாணி நடிப்பில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குவார் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 விரைவில் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


  ரியல்மி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ரியல்மி வாட்ச் 2 மாடலை அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு நிறத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  ரியல்மி வாட்ச் 2 கோல்டு நிற வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சந்தை வல்லுநரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்வாட்ச் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

  ரியல்மி வாட்ச் 2

  ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்

  - 1.4 இன்ச் 320x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன்
  - 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
  - இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
  - ப்ளூடூத் 5.0
  - 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  - இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ2 சென்சார்
  - நோட்டிபிகேஷன்
  - வாட்டர் ரெசிஸ்டண்ட் (ஐ.பி.68)
  - 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாத வாக்கில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கிய முதல் 15 நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.

  தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய 40 நாட்களில் டிசோ வாட்ச் 2 மொத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

  டிசோ வாட்ச் 2

  இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை வாட்ச் 2 பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. டச் ஸ்கிரீன், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
  தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகின. 

  இந்த நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதி படம் 2019-ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். 

  கார்த்தி, லோகேஷ் கனகராஜ்
  கார்த்தி, லோகேஷ் கனகராஜ்

  கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

  லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

  திரிஷ்யம் 2

  திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓராண்டுக்கு மேலாக முடங்கி இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.
  ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக முடங்கி உள்ளது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.

  காஜல் அகர்வால்

  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவரால் மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது, இதன்காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
  கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க தயாரானார்.

  இதன்பின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

  கமல்ஹாசன்

  இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
  மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

  இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். 

  விஷால்

  இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து, இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

  இந்நிலையில், எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளார். அதன்படி ‘துப்பறிவாளன் 2’ படத்தை ஜனவரியில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரலில் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
  தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

  அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

  நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.   தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார்.   அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

  மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமராஜன், கனகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து இயக்குநர் கங்கை அமரன் ஆலோசித்து வருகிறார்.
  கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படம் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. 

  படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்டது. அதிலும் வாழைப்பழ காமெடி, அந்த கேள்விய ஏன்டா என்கிட்ட கேட்ட உள்ளிட்ட காமெடிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த நிலையில், படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

  இதுகுறித்து கங்கை அமரன் கூறும்போது, “கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறோம். இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
  சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். 

  தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சமந்தா.   ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி’ என்று நாகார்ஜுனா உற்சாகமாக கூறியிருக்கிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print