என் மலர்

  நீங்கள் தேடியது "டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே டுகாட்டி ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மற்றும் 1260 எஸ் மாடல்களை வெளியிட்டிருந்தது.

  புதிய மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் யூனிட்கள் குறித்து டுகாட்டி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மல்டிஸ்டிராடா விநியோகம் ஜூலை மாத மத்தியில் துவங்க இருக்கிறது.

  இந்தியாவில் ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மற்றும் 1260 எஸ் மாடல்களின் விநியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. புதிய  மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் 1262 சிசி, L-ட்வின், DVT டெஸ்டாஸ்டிரெட்டா இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 158 பி.ஹெச்.பி. பவர், 129.5 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் டெஸ்மோடிரோமிக் வேரிபிள் டைமிங் வழங்கப்பட்டுள்ளது.  மற்ற அம்சங்களை பொருத்த வரை மல்டிஸ்டிராடா 1260 பைக் பீக் மாடலில் ஓலின்ஸ் சஸ்பென்ஷன், டெர்மிகோனி எக்சாஸ்ட் சிஸ்டம், கார்னெரிங் ஏ.பி.எஸ்., பை-டைரெக்ஷனல் க்விக்-ஷிஃப்டர், கார்பன்-ஃபைபர் பாகங்களான வின்ட்ஸ்கிரீன், முன்பக்க மட்கார்டு மற்றும் ஏர் இன்டேக் கவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

  இத்துடன் வெவ்வேறு சேசிஸ்கள், முன்பக்கம் புதிய ஜியோமெட்ரி மற்றும் நீண்ட ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற வீல்பேஸ், ரேக் மற்றும் டிரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் ரேஸ் சார்ந்த லிவெரி, எடை குறைவான அலுமினியம வீல்கள், ஹேன்டிள்பாரில் பேக்லிட் ஸ்விட்ச்கள், நான்கு டிரைவிங் மோட்கள், வீலி கன்ட்ரோல் மற்றும் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஎஃப்டி டிஸ்ப்ளே, எல்இடி ஹெட்லைட் மற்றும் கார்னெரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் விலை ரூ.21.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×