என் மலர்

  நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் 10 ப்ரோ"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
  • கலெக்டர் ஆய்வு

  சோளிங்கர்:

  ராணிப்பேட்டை மாவட்டம் நட சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரிப்பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட வே ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தரராஜன் வரவேற்றனர்.

  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏரிப்பகுதியில் வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

  பின்னர் கூடலூரில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சத்தில் சாலை, பூங்கா, குடிநீர் பணிகளையும், அங்கு உள்ள 57 வீடுகள் புதுப்பிக்கப்படும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கூடலூர், ஐப்பேடு பகுதிகளில் 100 நாள் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


  குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிப்செட்-ஐ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என அழைக்கப்பட இருக்கிறது. 

  இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் புதிய பிரசாஸர் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவன மாடல்களில் இந்த பிரசாஸர் முதலில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

   ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

  முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

  அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் வளைந்த குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  புகைப்படங்களை எடுக்க 48 எம்பி வைடு சென்சார், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருப்பதையொட்டி சாம்சங் அங்கு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

  முன்னதாக 2018 ஆம் ஆண்டு கேலக்ஸி நோட் ஒலிம்பிக் எடிஷன், 2014-இல் கேலக்ஸி நோட் 3 ஒலிம்பிக் எடிஷன், 2016-இல் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒலிம்பிக் எடிஷன், கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 விண்டர் ஒலிம்பிக் கேம்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது.

  புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் டோக்யோ ஒலிம்பிக்ஸ் சின்னம் பேக் கவரில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரிசம் வைட் நிறம் கொண்டிருக்கிறது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலை விட ஸ்பெஷல் எடிஷன் மாடலில் புதிய பேக்கேஜ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் விசேஷ வடிவைப்பு கொண்ட கேலக்ஸி பட்ஸ் இயர்போன்களும் வழங்கப்படுகிறது.  மற்றபடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

  இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை 1000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.70,420) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor10Lite  ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே , கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0, 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

  - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர்
  - ARM மாலி-G51 MP4 GPU
  - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
  - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
  - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
  - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  இந்தியாவில் ஹானர் 10 லைட் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் கிரேடியன்ட் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #GalaxyS10 #Smartphone  சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது. புதிய எஸ்10 சீரிசில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 

  இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்குகிறது. எனினும் ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதியே விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

  இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Sony  சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்‌ஷிப் எக்ஸ்பீரியா 1 மாடலை போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட வைடு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  சோனி எக்ஸ்பீரியா 10 சிறப்பம்சங்கள்:

  - 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
  - ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
  - 3 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 13 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/2.0
  - 5 எம்.பி. கேமரா, f/2.4
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - டூயல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு பை 
  - 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி  சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

  - 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
  - 4 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/1.75
  - 8 எம்.பி. கேமரா, f/2.4
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - டூயல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு பை 
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

  சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது. #GalaxyS10 #Airtel  சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கியிருக்கிறது.  

  இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. வேரியண்ட், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. வேரியண்ட் ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும்.

  ஏர்டெல் சலுகையில் கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.9,099, 512 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.13,809 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலுக்கு ரூ.15,799 முன்பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

  முன்பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் 128 ஜி.பி. மாடலுக்கு மாதம் ரூ.2,999 தொகையை 24 மாதங்களுக்கும், 512 ஜி.பி. மாடலுக்கு ரூ.3,499 24 மாதங்களுக்கு தவணையாக செலுத்த வேண்டும்.   அந்த வகையில் முன்பணம் மற்றும் தவணை தொகையை சேர்க்கும் போது கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.81,075, கேலக்ஸி எஸ்10 512 ஜி.பி. விலை ரூ.97,785 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. விலை ரூ.87,775 செலுத்துவர். 

  புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

  கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என சாம்சங் அறிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyS10 #Smartphone  சாம்சங் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியும், 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது.

  கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. 

  கேலக்ஸி எஸ்10 பிளஸ் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி மாடல்கள் லக்சூரியஸ் வைட், செராமிக் வைட் மற்றும் செராமிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

  கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியில் கிடைக்கிறது.  அறிமுக சலுகை:

  புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை அறிவிக்கப்பட்டிருப்பதோடு இவற்றுக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளன. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

  புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyS10 #Smartphone  சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது.

  மூன்று கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களிலும் புதிய பன்ச்-ஹோல் ரக செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளேக்கள், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் சான்று, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை மூன்று மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

  மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிசில் வைபை 802.11ax, டால்பி அட்மோஸ், வேப்பர் சேம்பர் கூலிங் சி்ஸ்டம் (கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் மட்டும்), ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0, வயர்லெஸ் பவர்ஷேர் (மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் போன்றே கேலக்ஸி எஸ்10 மாடல்களிலும் IP68 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 3டி டெப்த் கேமரா, 3 ஜி.பி. ரேம் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
   


  கேலக்ஸி எஸ்10 சிறப்பம்சங்கள்:

  - 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
  - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
  - 8 ஜி.பி. ரேம்
  - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
  - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
  - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
  - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
  - 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
  - இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
  - அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி  கேலக்ஸி எஸ்10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

  - 6.4 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
  - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
  - 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
  - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
  - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
  - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
  - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
  - 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2
  - 128 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. (மூன்று வேரியண்ட்கள்)
  - மூன்று வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
  - அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி  கேலக்ஸி எஸ்10இ சிறப்பம்சங்கள்:

  - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஃபிளாட் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
  - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
  - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
  - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
  - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
  - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
  - 128 ஜி.பி., மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
  - இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
  - ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்பம்சங்கள்:

  சாம்சங் கேலக்ஸி எஸ் 10 5ஜி மாடலில் குவாட் ஹெச்.டி. பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் கேலக்ஸி எஸ்10 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

  புகைப்படங்களை எடுக்க நான்கு கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மூன்று கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்றும் நான்காவதாக 3டி டெப்த் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. டூயல் பிக்சல் AF, f/1.9, இரண்டாவது செல்ஃபி கேமரா hQVGA ரெசல்யூஷன் வழங்கும் 3டி டெப்த் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

  கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ விலை: 

  சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலை 899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,900) முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் மற்றும் ப்ரிஸ்ம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,000) முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன், ப்ரிஸ்ம் வைட், செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

  கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விலை 749.99 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,300) முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் ப்ரிஸ்ம் வைட் மற்றும் சேனரி எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. மூன்று கேலக்ஸி எஸ்10 மாடல்களும் மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
   
  இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.  இதேபோல், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

  ஏற்கனவே, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது ரூ.10 லட்சம் திருடு போனது தொடர்பாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. கல்ப்நாத் பஸ்வான் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். #SamajwadiMLA #KalpnathPaswan
  லக்னோ:

  பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

  அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

  என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.

  இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?

  இவ்வாறு பஸ்வான் கூறினார்.

  எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.

  இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
  • Whatsapp
  • Telegram