என் மலர்

  நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.

  சென்னை:

  தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்த அரசு தேர்வுத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

  12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (13-ந்தேதி) பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 16.25 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 3,225 மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

  மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய வசதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கழிவறை, தூய்மை பணி, போதுமான அளவு பணியாளர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போன்றவற்றை ரகசியமாக கொண்டு வர தேவையான அளவு வாகனங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவாக மேற்கொள்ள வேண்டும்.

  மையங்களில் வினாத்தாளை பாதுகாப்பாக வைக்கவும், விடைத்தாள்களை திருத்தம் செய்ய பாதுகாப்பு மையங்களில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கவும் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  கோவை,

  கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது32). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை - விளாங்குறிச்சி ரோட்டில் சேரன்மாநகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வெள்ளலூர் வெள்ளிமலை தோட்டத்தை சேர்ந்தவர் மருதாச்சலம்(70). இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் எதிர்பாராத விதமாக மருதாச்சலம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் என்று கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்தார்.
  • மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம்:

  தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

  இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினரும், செயலாளருமான காஞ்சிபுரம் மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

  அப்போது அவர் கூறுகையில்:-

  தேர்வுகள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும் மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  மேலும் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு விதிகளை அனைத்து அலுவலர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகள் புகார்கள் இன்றி நடைபெறும் அளவில் ஏற்பாடுகளும், மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுதும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

  வரும் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 114 மாணவ -மாணவியர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ மாணவியர்களும் எழுத உள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
  • போலீசார் செந்தூர் பாண்டியன் (29), ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி,  

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி சென்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

  இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

  இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியன் (29), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
  • அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  குமாரபாளையம்:

  கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(வயது 46), சமையல் தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) மில் ஊழியர். இவர் தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அப்பகுதி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

  கோவை,

  கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கிருஷ்ணா கவுண்டர் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஹேமலதா (14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஹேமலதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து துரைசாமி மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

  வேலாண்டிபாளையம் அருகே உள்ள பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி அமுத பூரணி (36). இவர் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது கணவரிடம் தாய் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும், அவரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை .

  அமுத பூரணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

  இது குறித்து கார்த்திகேயன் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார்.
  • ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது.

  சேலம்:

  சேலம் ஜாகீர் அம்மாபா ளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

  இந்த நிலையில் மகனுக்கு, ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிறுவனின் அரை நிர்வாணம் படத்தை எடுத்து உதயகுமார், மாணவி ஒருவருடைய படத்துடன் மார்பிங் செய்து அந்த படத்தை டாக்டர் ரமேஷிடம் காட்டி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

  இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் ரமேஷ், தனது மகன் படத்தை ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டு எச்சரித்து அனுப்பினார்.

  இதனால் கோபம் அடைந்த உதயகுமார், தனது கடையில் வேலை செய்யும் தொளசம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (24), ஞானசேகரன் (22) ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

  இதையடுத்து ஊழியர்கள் இருவரும் டாக்டர் வீட்டுக்கு சென்று அந்த படத்தை மீண்டும் காண்பித்து, அந்த படத்தில் இருக்கும் மாணவியின் தாய் விஷம் குடித்து மயங்கி விட்டதாகவும் கூறி 10 லட்சம் பணம் கேட்டு டாக்டரிடம் மிரட்டி உள்ளனர்.

  அங்கு அவர்கள் இரு வரையும் உட்கார வைத்து விட்டு சூரமங்கலம் போலீசா ருக்கு போனில் டாக்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உதயகுமார், மற்றும் அவரது உறவுகார பெண்ணையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனுபிரியா மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
  • அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.

  கோவை,

  கோவை காட்டூர் காளப்பன் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அனுபிரியா (வயது 25). இவர் செல்லப்பன் வீதியில் உள்ள ஒரு மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் அனுபிரியா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

  இதையொட்டி அனுபிரியாவின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை மையம் முன்பு திரண்டு நின்றனர். அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். எனவே அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை நடத்தி தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதை ஏற்று உறவினர்கள் அனுபிரியாவின் உடலை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  போலீசார் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் வேலை பார்க்கும் திலகவதி, நாகராஜ் ஆகியோருக்கும், அனுபிரியாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இது குறித்து அனுபிரியா காட்டூர் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரி வித்தார். போலீசார் மெட்டல் கடைக்கு விரைந்து சென்று அனுபிரியாவிடம் தகராறு செய்த திலகவதி, நாகராஜ் ஆகியோரை எச்சரித்து விட்டு சென்றனர்.

  இது குறித்து இவர்கள் 2 பேரும் மெட்டல் கடை உரிமையாளர் சிவக்குமாரிடம் தெரி வித்தனர். உடனடியாக உரிமையாளர் அனுபிரியாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து போலீசில் ஏன் புகார் செய்தாய் என கண்டித்ததுடன், சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ, இனி உனக்கு இங்கு வேலை இல்லை என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

  இதன் காரணமாக மனவேதனை அடைந்த அனுபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  இதையடுத்து அனுபிரியாவை தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப்பதிவு செய்து மெட்டல் கடை உரிமையாளர் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சிவக்குமார் (36), ஊழியர் நாகராஜ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அனுபிரியாவுடன் தகராறு செய்த திலகவதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிகண்டன் மொபட்டில் ெசன்றார்.
  • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் இறந்தார்.

  கோவை,

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கூலித் ெதாழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தம்பம்பதி - கோ ழிப்பண்ணை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

  அப்போது திடீரென மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை அந்த வழியாக சென்றவர் மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சிறுமுகை அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (35). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.அந்த அந்த வழியாக சென்ற லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54)நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை.
  • மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சிசி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54). இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளை ராமநத்தம் கடைவீதியில் உள்ள மளிகை கடை முன் நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின் நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து அந்தோணிசாமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று போலீசார் ராமநத்தம் மேம்பாலம் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

  . அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (20), பெரம்பலூர் மாவட்டம் ரெட்டிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (19) எனவும். இவர்கள் இருவரும் ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print