என் மலர்

  நீங்கள் தேடியது "கேலக்ஸி டேப் ஏ 10.1"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung  சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட்கள் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ என அழைக்கப்படுகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் மிக மெல்லிய டேப்லெட் மாடலாக கேலக்ஸி டேப் எஸ்5இ உருவாகியிருக்கிறது.

  மெல்லிய பெசல்களுடன் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் எஸ்5இ வெறும் 5.5 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்5இ டேப்லெட் AMOLED டிஸ்ப்ளே, எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் இன்டகிரேட்டெட் டெக்ஸ் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது.

  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல் தற்சமயம் ஜெர்மனியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மற்ற சந்தைகளில் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.   கேலக்ஸி டேப் எஸ்5இ சிறப்பம்சங்கள்:

  - 10.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  - ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர்
  - அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
  - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
  - ஆண்ட்ராய்டு 9 பை
  - பிக்ஸ்பி 2.0
  - 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ மாடல் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை வைபை மாடல் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் எல்.டி.இ. வெர்ஷன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.  கேலக்ஸி டேப் ஏ 10.1 சிறப்பம்சங்கள்:

  - 10.1 இன்ச் 1920x1200 பிக்சல் டிஸ்ப்ளே
  - எக்சைனோஸ் 7904 பிராசஸர்
  - 3 ஜி.பி. ரேம்
  - 32 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 8 எம்.பி. பிரைமரி கேமரா
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
  - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
  - 6150 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் வைபை மற்றும் எல்.டி.இ. மாடல்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை 210 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.17,000) என்றும் எல்.டி.இ. வேரியண்ட் விலை 270 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×