என் மலர்
நீங்கள் தேடியது "வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல்"
- தொடர் மழையால் சாலைகள் சேறும் சகதியுமானது
- சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வேலூர் :
காட்பாடி ரயில்வே மேம்பாலம் பலமிழந்து காணப்பட்டதால் அதனை உறுதிபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் சித்தூர் மற்றும் குடியாத்தம் வழியாக செல்லும் வாகனங்கள் ஓடை பிள்ளையார் கோவில் அருகே இடது புறத்திலிருந்து மதி நகர், ஹவுசிங் போர்டு சாலை வழியாக மாற்றுப்பதையில் இயக்கப்படுகின்றன.
தற்போது வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஹவுசிங் போர்டு சாலை சேறும் சகதியுமாக மாறி வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகிறது.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே சாலையை சீரமைக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.