என் மலர்

  நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
  • போர்வெல் மோட்டார் சுவிட்சை போட்டபோது விபரீதம்

  அரக்கோணம் :

  அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 68). லாரி கிளீனர். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

  இந்நிலையில், மகள் பார்வதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அவருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. இதனால், உறவினர்கள்மற்றும் அக்கம்பக்கத்தினர் என்று ஏராளமானவர்கள் வீட்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.

  இதனால், வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் வீராசாமி நேற்று ஈடுபட்டார். வீட்டை கழுவி விடுவதற்காக போர்வெல் மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக வீராசாமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

  இதில் படுகாயமடைந்த அவரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விடிந்தால் மகளை திருமண கோலத்தில் பார்க்க ஆசைப்பட்ட தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

  ×