search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை உயர்நீதிமன்றம்"

    • ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
    • இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டி வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அதனைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் கடும் புயலை கிளப்பியிருக்கிறது.

    நடிகைகள் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

    இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

    • நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
    • காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும்.

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

    இந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த 4 மடங்களையும் நியமிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தனது பெண் சீடர் உமாதேவிக்கு பொது அதிகாரம் வழங்கிய நித்யானந்தா இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்று மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்தார்.

    நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று மனுதாரர் பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரிய வேண்டும். அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மடங்களை நியமிக்க தக்காரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    மேலும், "நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும் காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    • வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி.
    • மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உறுதி.

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.

    வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
    • சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார்.

    படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால், கோபி கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகாரை நடிகர் விமல் அளித்தார்.

    இந்நிலையில் விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

    ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

    • வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும்.
    • சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

    வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பார்முலா4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கில் முறையீட்டை ஏற்றுக்கொண்டு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது.

    அதன்படி, பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது, பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்று பிரிவுகளில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    சென்னை:

    தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள். மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த ஒரு போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். முதலமைச்சர் ஜாமீன் குறித்தும் அவதுறாக பேசியதால் திமுக பிரமுகருக்கு புகார் அறிவித்தார்.

    இந்த புகார் அடிப்படையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைபோல் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதின்றி போராட்டம் நடத்தியதாக அழிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கானது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி ஜெயசந்தரன் கையில் விசாரனைக்கு வந்த போது சி.வி.சண்முகம் தரப்பில் மனுதாரர் உடைய பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால். அது அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் என கூறிய நீதிபதி மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த காவல் துறை வழக்கறிஞர் சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அதன் மூலமாக ஒரு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் தான் அந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கல் மீதான தீர்பை நீதிபதி ஜெயசந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

    • ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன்மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் நான் கலைக்கமாட்டேன் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என ஃபெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், "கடந்த 80 நாட்களுக்கு மேல் பெலிக்ஸ் சிறையிலிருந்து வருகிறார். சவுக்கு சங்கர் பேசிய அந்த கருத்திற்கும் தனது மனுதாரருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கோருகிறார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மனுதாரர் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மருதாச்சலம் ஃபெலிக்சுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் கேட்டுள்ளார். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் அவர் செயல்பட்டார். ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதில் வழங்கிய உத்தரவாதத்தை அவரே மீறி உள்ளார். எனவே அவரது யூட்யூப் சேனலை மூட உத்தரவிட வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் மருதாச்சலம் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலை மூட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்று நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

    • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் ஆகும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது. அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எல்லோரும் எங்கு இருந்தார்கள் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
    • ரேசன் கடைகளில் மது விற்க அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.

    தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேசன் கடைகளில் விற்க அனுமதி கோரிய வழக்கை தள்ளி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
    • மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.

    நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.

    மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
    • முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது.

    10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

    அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டனர்.
    • ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி வெட்டிய தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால் அவர் 4,50,132 வாக்குகளை பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார்.

    அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டுள்ளனர். இச்சம்பவம் எங்கு? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை.

    அண்ணாமலைக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளனர். இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அண்ணாமலை தோல்வியைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் ஆடு வெட்டப்பட்டதாக பாஜக பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி வெட்டிய தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    ×