சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
tsitsipas
Published on

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பெல்ஜிய வீரர் ரபேல் கொலிக்னன், அர்ஜெண்டினா வீரர் ஜுலான் மேனுவல் செரண்டலோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய செரண்டலோ 6-1 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 ( 7-5), 7-5 என வென்ற பெல்ஜியம் வீரர் கொலிக்னன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று மதியம் நடைபெறும் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், கஜகஸ்தான் வீரரை எதிர்கொள்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com