சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
tsitsipas
Published on

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சுவிட்சர்லாந்தின் ஜெரோமி கிம் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக சுவிட்சர்லாந்து வீரர் 2வது செட்டை 7-6 (7-2) என கைப்பற்றினார்.

3வது செட்டில் இருவரும் 5-5 என்ற செட் கணக்கில் சமனிலை வகித்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று நிறுத்தப்பட்ட ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 3வது செட்டை 7-6 (7-5) என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே, நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ, பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன் உள்ளிட்டோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com