FIFA: பரபரப்பான அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின்.. 16 வருடத்திற்கு பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்

ஓயர்சபல் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார்.
ஸ்பெயின்
ஸ்பெயின்
Published on

23-வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் டல்லாஸில் தொடங்கிய விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தீவிரத்துடன் விளையாடின.

முதல் பாதி

ஸ்பெயின் சார்பில் ஓயர்சபல் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார்.

இதனால் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிரான்ஸ் அணி தொடர்ந்து முயன்றாலும் அதனால் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 58வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரொ பேரோ அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

பிரான்ஸ் தீவிரமாக முயன்றும் கடைசி வரை கோல் அடிக்க முடியாது போனது. ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. அப்போது, ​​நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் பட்டம் வென்றது.

மறுபுறம், 2018 மற்றும் 2022க்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பிரான்ஸ் தவறவிடுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com