உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஆயுஷ் ஷெட்டி வெற்றி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
ayush shetty
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஷீ யூகி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-14 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக சீன வீரர் 2வது செட்டை 21-13 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-19 என போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் அபேய்விக்ரமா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com