

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.
யோசித்துச் செயல்பட வேண் டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றை கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சோர்வு அகன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர்.
நல்லது நடக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
நினைத்தது நிறைவேறும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வாகனம் வாங்கும் வாய்ப்புக் கைகூடும்.
நல்ல செய்திகள் நாடி வரும் நாள். வரன்கள் முடிவாகும். அந்நிய தேச அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உறவினர் பகை அகலும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வரன்கள் முடிவாகும்.
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.