search icon
என் மலர்tooltip icon

    பிலிப்பைன்ஸ்

    • வீடியோவை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியதில் அங்குள்ள பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

    இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலோலோஸ் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதையும், அந்த தேவாலயத்துக்கு மணமகள் டயான் விக்டோரியானோ வெள்ளத்தில் நடந்து செல்வதையும் காண முடிகிறது. பின்னர் தேவாலயத்துக்கு சென்று மணமக்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

    இதை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார். மற்றொரு பயனர், கடற்கரை கல்யாணம் போல் உள்ளது. மணல் குறைவு என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

    • பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்தது.
    • தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் உள்ள தலிம் தீவுக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பினாங் கோனான் நகராட்சியில் இருந்து புறப்பட்டு வந்த அந்த படகில் 70 பேர் பயணம் செய்தனர்.

    அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றி கொண்டு சென்றதால் படகு தள்ளாடியபடி சென்றது. அப்போது பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 40 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.

    • மறுபகிர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரசுக்கு வரவேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது.
    • இந்தப் பெரிய கடனை செலுத்துவதற்கு இந்த விவசாயிகளுக்கு எந்த வழியும் இல்லை என அதிபர் தெரிவித்தார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார்.

    1986 ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் மார்கோஸின் தந்தை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16% அளவிற்கு சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், கிட்டத்தட்ட 30 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

    கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் மறுபகிர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரசுக்கு வரவேண்டிய தொகை , செலுத்தப்படாமல் போய்விட்டதாலும், நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பண்ணைத்துறையின் பங்களிப்பு சுருங்கி வருவதாலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாராளுமன்றம் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    சுமார் 35 வருடத்திற்கும் முன்பாக, 1988 நில சீர்திருத்த திட்டத்தின் கீழ், 30 ஆண்டு கால நிலுவைத் திட்டத்தில் நிலங்கள் விவசாயத்திற்காக வழங்கப்பட்டது. ஆனால் விவசாயிகளால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.

    தற்போது பெர்டினண்ட் மார்கோஸ் கையொப்பமிட்டுள்ள "புதிய விவசாய விடுதலைச் சட்டம்" விவசாயிகளின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

    ஜனாதிபதி மாளிகையில் இச்சட்டத்தில் கையெழுத்திடும் விழாவில் அந்நாட்டு அதிபரும், விவசாய அமைச்சருமான மார்கோஸ் கூறியதாவது:

    இந்தப் பெரிய கடனை செலுத்துவதற்கு இந்த விவசாயிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அரசாங்கம் இதனை ஏற்பதே சரியான செயல். அரசாங்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு உணவளிப்பதற்காக நாங்கள் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த தள்ளுபடியினால் 610,000க்கும் மேற்பட்ட நில சீர்திருத்த பயனாளிகள் பலனடைவார்கள். அதே சமயம் அரசாங்கத்திற்கு இதனால் ரூ.8600 கோடிக்கும் மேல் (1.04 பில்லியன் டாலர்) செலவாகும். குத்தகைதாரர்களுக்கு அளிப்பதற்காக நில உரிமையாளர்களிடம் பெற்ற நிலங்களுக்கு ஈடாக அந்த உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் மேலும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக செலவிட வேண்டும். நாம் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மார்கோஸ் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பண்ணை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அரிசி இறக்குமதி அதிகரித்ததுள்ளது.

    விவசாயத்தை காக்க நாடு எடுத்திருக்கும் பெரிய முயற்சியாக இதனை வல்லுனர்கள் வர்ணிக்கின்றனர்.

    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
    • பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.

    மணிலா:

    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது.

    இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்றும் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடந்து வருகிறது.

    தற்போது பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்து சிதறி வருவதால் வடகிழக்கு அல்பே மாகாணத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கப்பல் 1,089 பேருடன் கடலில் மூழ்கியது.
    • கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    மணிலா :

    2-ம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டமான 1942-ம் ஆண்டு ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான 'மான்டிவீடியோ மாரு' என்ற கப்பல் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய போர் கைதிகளை ஏற்றிக்கொண்டு பப்புவு நியூ கினியாவில் இருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில் சென்றபோது, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அதனை தாக்கியது. ஆஸ்திரேலிய போர் கைதிகள், ஜப்பான் ராணுவ வீரர்கள் மற்றும் நார்வே மாலுமிகள் என 1,089 பேருடன் கப்பல் கடலில் மூழ்கியது. இது இன்றளவும் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான கடல்சார் பேரழிவாக பாா்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பேரழிவு நிகழ்ந்து 81 ஆண்டுகளுக்கு பிறகு கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது. புக்ரோ என்ற நெதர்லாந்து ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய கடல்சார் தொல்லியல் குழுவான சைலன்ட்வேர்ல்ட் அறக்கட்டளை, இந்த பணியை மேற்கொண்டது.

    உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பணி தொடங்கிய 14 நாட்களுக்கு பிறகு கடலின் மேல்மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 123 அடி ஆழத்தில் கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    • தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
    • ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனால், ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    எனினும் தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தீ விபத்தால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றன.

    • பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

    மணிலா:

    பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர்.
    • இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    இந்தக் கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அலறிய பயணிகள் பலர் கடலில் குதித்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கப்பலில் எரிந்த தீயை அணைக்க கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர். காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் அலறினார்கள்.
    • கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் அலறினார்கள். பலர் கடலில் குதித்தனர். கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளில் ஏற்றினர். மறுமுனையில் கப்பலில் எரிந்த தீயை அணைத்து கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானார்கள். 7 பேர் மாயமாகி உள்ளனர். கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
    • தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 2 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகிறது.
    • கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மணிலா:

    தென் கிழக்கு ஆசியாவின் தீவு நாடான பிலிப்பைன்சில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஆனது இங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அதுபோல அரசுக்கு எதிராக இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர்.

    இவர்கள் கிராமப்புறம் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 20 பேர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதனையடுத்து கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    • 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

    பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார். சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன் போனசும் வழங்கியுள்ளார்.

    குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும், மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறுகையில், " காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களின் நிலையை உணர்கிறேன். காதலர் தினத்தன்று யாரும் அவர்களுக்கு சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்க நினைத்தோம். இதன் மூலம்,யாராவது தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், யாரோ தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அவர்களால் உணர முடியும்" என்றார்.

    மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார். 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்த பிறகு இழப்பீட்டிற்கு தகுதி பெற்றனர். மேலும், தகுதியான ஊழியர்களிடம் அவர்களது கடைசி உறவு, பிரிந்ததற்கான காரணம் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    ×