என் மலர்
பெரம்பலூர் - Page 2
- வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
- சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரில் பாரதி நகர் 2-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பானுமதி (வயது 55). கணவர் இறந்துவிட்டார். மகன் கரூரில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்ற பானுமதி நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த ேபாது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
- வளாக நேர்காணலில் 370 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
- தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில்
பெரம்பலூர்:
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஆசியுடன் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வருடந்தோறும் சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு 100 சதவீத வேலைவாய்ப்பு மாணவ, மாணவியர்களுக்கு பெற்றுதருவதை முதல் கடமையாக கொண்டு இயங்கிவருகிறது.
இந்த கல்வி ஆண்டிலும் இக்கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக அண்மையில் நடத்திய வளாக நேர்காணல்களில் 22 நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டன.
இறுதியாண்டு பயிலும் 370 மாணவ மாணவியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பணிநியமன ஆணைகளை வழங்கியதோடு, அனைவரும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் சிறந்து வேலை செய்பவர்களாக திகழ்ந்து விரைவில் தொழில்முனைவோராக மாறி மற்றவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வாழ்த்தினார்.
வரவிருக்கும் நாட்களில் இன்னும் 15 - க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வளாக நேர்காணலில் பங்குபெற இருப்பதால், இதில் மற்ற கல்லூரி மாணவர்களும் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனர்
- ஆலோசனை குழு கூட்டம் நடந்தது
- 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு ேகடயம்
பெரம்பலூர்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடப்பாண்டின் சிறந்த தொழில் முனைவோர்க்கான கேடயத்தை 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார். மற்றும் தொழில் தொடங்க பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கி கடனை வழங்கினார். இக்கூட்டத்தில் வங்கியின் தஞ்சாவூர் மண்டல துணை பொது மேலாளர் கோடிஸ்வரராவ், ரிசர் வ் பேங்க் ஆஃப் இந்தியா துணை பொது மேலாளர் ஸ்ரீதர் , முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மகளிர் திட்ட இயக்குனர் கருப்புசாமி, நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக் , மாவட்ட தாட்கோ மேலாளர். சுந்தரம், பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து சென்ற போது பிரசவம்
- பிரசவம் பார்த்த இருவருக்கு உறவினர்கள் நன்றி
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி(வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் தனலட்சுமி தற்போது 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் சின்னவெண்மணி கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கு பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த தனலட்சுமியை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பிரசவ வலி அதிகமானதால் உடனடியாக அவசரகால மருத்துவ நுட்புனர் ஆனந்தராஜ் அவருக்கு முதலுதவி அளித்தார். அப்போது செல்லும் வழியிலேயே தனலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாயையும், சேயையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனலட்சுமியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் பாபுவிற்கும், முதலுதவி சிகிச்சை அளித்த ஆனந்தராஜுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- தூக்குமாட்டி தற்கொலை கொண்டார்
- பெரம்பலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
பெரம்பலூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரியங்கா நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்று பணி முடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.மதியம் 2மணிக்கு மேல் பிரியங்காவின் தொலைபேசிக்கு அவரது சகோதார் அழைத்த போது, அழைப்பை ஏற்காத காரணத்தால் சந்தேகமடைந்து தனது பெற்றோருக்கு தகவல் சொல்லி நேரில் சென்று பார்க்கச் சொல்ல, பெற்றேர்கள் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பிரியங்காவின் தந்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து டாக்டர் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை
- நகை, பணத்தை அள்ளிச் ெசன்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து பெருமத்தூர் நல்லூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (வயது 40). இவர் தனது மனைவியுடன் சின்னாறு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெருமத்தூர் நல்லூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் மாடுகளை வளர்ந்து வருகிறார்.தினமும் அதிகாலை வந்து பால் கறந்து எடுத்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று அதிகாலை பால் கறக்க வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த தெற்கு தெருவில் வசித்து வருபவர் தேவராஜன் மகன் பிரபாகரன் (32). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் வரை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது நான்கு பவுன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் இரு வழக்குகளையும் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும்மோப்ப நாய்படை பிரிவினர் பெருமத்தூர் நல்லூர் கிராமத்திற்கு வரவழைத்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர்.
- காலி குடத்துடன் நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு
- அதிகாரிகள் தாமதத்தால் 3 மணி நேரம் ெதாடர்ந்த அவலம்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம அருகே வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டைகுடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1வது வார்டில் சுமார் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் முடிவடைந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை குடிநீர் சப்ளை நடைபெறவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சி துறை அலுவலர்கள் என பல இடங்களில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை, இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் உள்ள அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திரண்ட பெண்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மறியல் போராட்டம் கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த குன்னம் போலீசார் பெண்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அரசு அலுவலர்கள் வந்து உரிய பதில் அளிக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவித்த போது தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால் கூட்டம் முடிந்தவுடன்தான் வரமுடியும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியல் போராட்டமானது சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து அப்பகுதியில் தடை பட்டது.கிராமசபா கூட்டம் முடிந்து அதன் பின்னர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் 2 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் தினத்தன்று தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முன்னே சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து
- படுகாயம் அடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை
அகரம்சீகூர்,
மதுரை மாவட்டம் ஆளவந்தான் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஷாம்கண்ணன்(வயது 22), மதுரை கே.கே. நகரை சேர்ந்த சஷ்வந்த்( 25 ), மதுரை விநாயகர் நகரை சேர்ந்த ஆகாஷ்(24 ), மதுரையை சேர்ந்த அஜய் (22 ) ஆகியோர் மாருதி ஸ்விட் காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு அடுத்துள்ள தம்பை பகுதியில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த மணிகண்டன்(33) என்பவர் ஓட்டி சென்ற ஜல்லி கல் லோடு ஏற்றிய டிப்பர் லாரி இவர்கள் சென்ற காருக்கு முன்னாள் சென்றுள்ளது. இந்த லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்து நடந்த இடத்திலேயே ஷாம் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் படுகாயம் அடைந்த அஜய் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேவை குறைபாடு காரணமாக நஷ்டஈடு வழங்க உத்தரவு
- பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு
பெரம்பலூர்
வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் ராஜவீதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் ஜோதிவேல் (வயது 46). இவர் கடந்த 14.11.2013 அன்று வி.களத்தூரில் உள்ள துணை தபால் நிலையத்தில் ரூ.30 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து அதற்குரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தார். ஆனால் அந்த சான்றிதழ்களை ஜோதிவேல் தொலைத்துவிட்டார். இதுதொடர்பாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் மனு தந்து, துணை தபால் நிலையத்தில் சேமிப்பு பத்திரத்தின் நகல் சான்றிதழ்கள் பெறும் வகையில் தடையின்மை சான்றிதழ் பெற்றிருந்தார். அதனைக்கொண்டு துணை தபால் நிலையத்தில் ஜோதிவேல் தனது தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான முதிர்வுத்தொகையை வழங்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் சேமிப்பு பத்திரங்களின் அசல் சான்றுகள் இருந்தால்தான் முதிர்வுத்தொகையை தரமுடியும் என்று துணை தபால் அதிகாரி தெரிவித்து முதிர்வுத்தொகையை வழங்க மறுத்துவிட்டார்.மேலும் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேசிய சேமிப்பு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் ஏதும் பெறவில்லை என்று சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஜோதிவேல் அந்த வங்கியில் இருந்து இதுதொடர்பாக சான்றிதழும் வாங்கி துணை தபால் நிலையத்தில் தாக்கல் செய்தார். இருப்பினும் முதிர்வுத்தொகையை ஜோதிவேலுக்கு வழங்காமல் தபால் துறையினர் அலையவிட்டதால், மன உளைச்சல் அடைந்த ஜோதிவேல், ஸ்ரீரங்கம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பெரம்பலூர் துணை கோட்ட கண்காணிப்பாளர், வி.களத்தூர் துணை தபால் அதிகாரி ஆகிய 3 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 5.4.2021 அன்று வக்கீல் மூலம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர் ஜோதிவேலுக்கு முதிர்வுத்தொகையை உடனே வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் ஜோதிவேலுவை அலையவிட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் தபால் துறையினர் 3 பேரும் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
https://www.dailythanthi.com/News/State/postal-authorities-should-pay-rs15-thousand-as-compensation-924935
- ஸ்ரீசாரதா மகளிர் கல்லுாரியில் நடைபெற்றது
- நுண்ணறிவு வளர்த்துக்கொள்வது குறித்து விரிவான விளக்கம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் நான் முதல்வன் திட்டம் இணைந்து 12 நாட்கள் நடத்திய செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்ததுவிழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.செயலாளர் விவேகான ந்தன், முதல்வர் சுபலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கே ற்றிவைத்தனர்.சிறப்பு விருந்தினராக எடுநெட் அகாடமி இயக்குநர் ராஜா கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் தகவல் தொழிலநுட்பத்தின் மூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவை வளர்த்து கொள்வது குறித்து விரிவாக பேசினார்.இதில் கணினி அறிவியல் துறை சூர்யா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாகஇளங்கலை முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி மோனிகா வரவேற்றார். முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி அனுஷா நன்றி கூறினார்.
- தமிழக அரசை கண்டித்து நடைபெற்றது
- அரசு ஊழியர்களின் கோரிக்கை பற்றி பட்ஜெட்டில் இல்லை என்று குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
தமிழக அரசு பட்ஜெடில் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யாததை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழக பட்ஜெட் 2023- 24 உரையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ள போதிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது, அரசு ஊழியர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அரசாக தமிழ்நாடு அரசு மாறியுள்ளது . எனவே இனியும் தமிழ்நாடு அரசின் ஏமாற்றப் போக்கினையும் நயவஞ்சக வார்த்தைகளையும் கேட்டு ஏமாற தயாராக இல்லை என தெரிவித்தார். பின்னர் தமிழக அரசை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்ப டுத்தவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.