என் மலர்

  செய்திகள்

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
  X
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி ஆடி மாதத்துக்கான ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கரு வறையில் உள்ள அங் காளம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங் காரம் செய்யப்பட்டது.

  உற்சவர் அம்மனுக்கு பலவித பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங் களால் மாலைகள் அணிவிக் கப்பட்டு, முத்தங்கி யுடன் துர்கா பரமேஸ் வரி அலங்காரம் செய்யப் பட்டது. பின்னர் உட்பிரகாத்தில் வைக்கப்பட்டது.

  நள்ளிரவு 11.30 மணிக்கு பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  அப்போது பூசாரிகள் பக்திப்பாடல்கள் பாடினர். ஊஞ்சலில் அங்குமிங்குமாக அசைந்தாடியபடி அம்மன் அருள்பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

  ஆடி அமாவாசையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப் புரம் உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூரில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட் டன.

  ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நேற்று காலையில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்த னர். பல பக்தர்கள் அம்ம னுக்கு தீச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ராமு, விழுப்புரம் ஜோதி, அறங் காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணே சன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழ கன் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

  செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார், 400-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  Next Story
  ×