என் மலர்

  செய்திகள்

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு 12-ந்தேதி கும்பாபிஷேகம்
  X

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு 12-ந்தேதி கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அவ்விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இனி ஏழுமலையான் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தர்ம தரிசனம் பக்தர்களுக்காக நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக திருமலை, திருப்பதி நடைபாதை மார்க்கங்களில் 109 கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  ஆனால் இனி நேர ஒதுக்கீட்டு முறையின் கீழ் பக்தர்கள் தரிசன டோக்கன் பெற்று ஒன்றரை முதல் 2 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம். காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

  ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அவ்விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த நாட்களில் பெருமாளுக்கு சேவையாற்ற விரும்பும் தன்னார்வ பக்தர்கள் (ஸ்ரீவாரிசேவார்த்திகள்) தாங்கள் விரும்பும் பிரிவில் சேவை செய்யும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலில் வரும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. 20-ந்தேதிக்குள் திருமலையில் உள்ள மாடவீதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ பொருத்தப்பட உள்ளது.

  விமான நிலையத்தில் உள்ளது போல் திருமலையிலும் பக்தர்களின் உடைமைகளை சோதிக்க அதிநவீன ஸ்கேனர்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  திருமலையில் பெய்த கனமழையால் முடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டம் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.
  Next Story
  ×