என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்31 May 2017 10:05 AM GMT (Updated: 31 May 2017 10:05 AM GMT)
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். முருகபெருமானின் பிறந்தநாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு, வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 8-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story
×