search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினோத விழா: மார்பில் கத்திபோட்டு வழிபட்ட இளைஞர்கள்
    X

    வினோத விழா: மார்பில் கத்திபோட்டு வழிபட்ட இளைஞர்கள்

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி தென்புதூரில் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் திருவிழாவில் மார்பில் கத்திபோட்டு இளைஞர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி தென்புதூரில் ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும் கத்தி போடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன தொடங்கி தேவாங்கர் சமுதாயத்தினர் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

    நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி மேலக்கோட்டையில் ஜமீன் அழைப்பு நடந்தது. அங்கு தானமாக அளித்த குதிரையை அலங்கரித்து சாமி அழைப்பு தொடங்கியது.

    கத்தியில் பூ, காதோலைகருகமணி ஆகியவற்றால் அலங்கரித்து குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலத்தின்போது ஏராளமான இளைஞர்கள் பக்தி பரசவத்துடன் மார்பில் கத்திபோட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

    இது பக்தர்களை பரவசப்படுத்தியது. அதன்பின்பு குதிரை கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

    Next Story
    ×