search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 6-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என அழைக்கப்ப டும் மாரியம்மன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை கடலாகவும், நோய்களையும், தீ வினைகளையும் தீர்த்து வைக்கும் அம்மனாகவும் இருந்து வருகிறாள்.

    பல்வேறு சிறப்புக்களுடன் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அம்மனின் திருமேனி வர்ணகலாபம் செய்து புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, மேற்கு ராஜகோபுரம், தெற்கு ராஜகோபுரம், வடக்கு ராஜகோபுரம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டு பரிவார விமானங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பித்து பஞ்சர்வணம் செய்யப்பட்டுள்ளன.



    திருப்பணிகள் நிறைவடைந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர், கடைவீதி விநாயகர், சன்னதி வீதி விநாயகர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், கருப்பண்ண சுவாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று (1-ந்தேதி) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை தேவதானுக்ஞை, பிராம்ஹ னானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், த்ரவ்யாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை விக்னேஸ்வர பூஜை, க்ராமசாந்தி, பிரவேச பலி, ரஷோக்ன ஹோமம், தீபா ராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது.

    நாளை (3-ந்தேதி) காலை 8 மணி முதல் பகல் 11.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தீர்த்த ஸங்க்ரஹணம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், அக்னிஸங்க்ரஹணம், யாகசாலை நிர்மாணம், தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்பலங்காரம், கலாகர்‌ஷணம், யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம், முதல்கால யாகசாலை பூஜை தொடக்கம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.



    வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6-ம் காலயாக பூஜை தொடக்கம், த்ரவ்யாஹூதி, 5.30 மணிக்கு பரிவாரம் பூர்ணாஹூதி, 5.45 மணிக்கு பிரதானம் பூர் ணாஹூதி, தீபாராதனை, 6 மணிக்கு யாத்ராதானம் உடன் கடங்கள் புறப்பாடு,

    7.10 மணிக்கு மாரியம்மன் தங்க விமானம், நூதன ராஜ கோபுரங்கள் மற்றும் பரிவார விமானங்கள் மகா கும்பாபிஷேகமும், 7.20 மணிக்கு மாரியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மாரியம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி முதல் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.தென்னரசு, சுழல்முறை அறங்காவலர் பராசர திருவேங்கடபட்டர் சுவாமி மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×