search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாகசாலை பூஜைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ள கலசங்கள்
    X
    யாகசாலை பூஜைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ள கலசங்கள்

    திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகம்: நாளை யாக பூஜைகள் தொடங்குகிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
    கடந்த 26-ந்தேதி துர்க்கை அம்மன் உற்வசத்துடன் கும்பாபிஷேக சிறப்பு பூஜை தொடங்கியது. 28-ந்தேதி முதல் கோவில் கொடி மரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று காலையிலும் சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு திசப ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நாளை காளை சாந்தி ஹோமம் மற்றும் பூஜை நடக்கிறது. மாலை கும்ப அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து யாக சாலையில் பூஜைகள் நடைபெறும்.

    கும்பாபிஷேகத்திற்காக 5-ம் பிரகாரத்தில் 27 ஆயிரத்து 244 சதுர அடியில் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    மூலவருக்கு 33 குண்டங்கள் அம்பாளுக்கு 25 குண்டங்களுடன் உத்தம பட்சயாக சாலை பரிவார மூர்த்திகளுக்கு 50 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக, அழகிய வேலைப்பாடுகளுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சிவனின் 2 கண்கள் என்று அழைக்கப்படுவது வேதம் மற்றும் ஆகமங்கள் ஆகும். இதில் குணடங்கள் முறையாக கணிதப்படி அமைக்கப்படுவது அதன் படி பழமை, ஆகம விதிகள் கணித முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.


    அருணாசலேஸ்வரர் கோவிலில் யாகசாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    யாகசாலை பூஜையில 400 சிவாச்சாரியார்கள், ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் பாராயணம் செய்ய 120 வேத விற்பனர்கள், முதன்மை சிவாச்சாரியார்கள் பன்னிரு திருமுறைகள் ஒதுவதற்கு 16 ஒதுவார்கள், பல்வேறு தாளங்கள் இசைக்க இசைக் கலைஞர்கள்கலந்து கொள்கிறார்கள். கணபதி தாளம், என்ற சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 31-ந்தேதி யாக சாலை பூஜைகள் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை மாலை நடக்கும். பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 12-வது கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா அபிஷேகமும் திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்படும்.

    அன்றிரவு, பஞ்ச மூர்த்திகள், விநாயகர் கற்பக விருட்ச வாகனத்திலும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளி ரதத்திலும், அபித குஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி பெரிய ரி‌ஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் தங்க ரி‌ஷப வாகனத்திலும் சண்டிகேஸ்வரர் பெரிய இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவர்.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தபட்டுள்ளது.
    Next Story
    ×