search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நீரிழிவு, இருதய நோயை தடுக்கும் பீர்-  புதிய ஆய்வில் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நீரிழிவு, இருதய நோயை தடுக்கும் பீர்- புதிய ஆய்வில் தகவல்

    • பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சிவப்பு ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவை போல பீரிலும் நன்மை பயக்கும் பாலிபினாக்கள் உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

    குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது.

    இந்த மையம் 23 வயதில் இருந்து 58 வயதுக்குட்பட்டவர்கள் சிலரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதாவது தொடர்ந்து 4 வாரங்கள் அவர்களை ஆல்கஹால் இல்லாத 330 மில்லி கிராம் பீரை குடிக்க வைத்தனர். இதில் அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரிய வந்தது.

    இந்த நுண்ணுயிரிகள் நீரிழிவு, இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் தான் இதுபோன்ற செயல்பாடுகள் உடலில் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சிவப்பு ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவை போல பீரிலும் நன்மை பயக்கும் பாலிபினாக்கள் உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹால் கலந்த பீரை சாப்பிடுவதால் இந்த நன்மை எதுவும் கிடைக்காது என அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×