search icon
என் மலர்tooltip icon

    உகாண்டா

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
    • பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்

    உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.

     

     

    கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    • பல தசாப்தங்களாக வேரூன்றிய மரங்களை கூட அப்புறப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது
    • மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்வு செய்வதை போல் இருந்ததாக பேட்ரீசியா கூறினார்

    மனிதர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்கள் இயற்கை வளங்களை சுரண்டுதலும் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி, நீண்ட காலமாக, சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் வனங்கள், மண், மரம், கனிமம், மலை, நதிநீர், காற்று மண்டலம் உள்ளிட்டவைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் போராடி வருகிறார்கள்.

    தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் பொது பயன்பாட்டிற்காக கட்டிடங்களை நிர்மாணித்தல் போன்ற காரணங்களுக்காக நீண்ட காலமாக வேரூன்றிய மரங்கள் கூட அப்புறப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில், தலைநகர் கம்பாலா நகரில், 29 வயதான, ஃபெயித் பேட்ரீசியா அரியோகோட் (Faith Patricia Ariokot), எனும் சுற்றுச் சூழல் ஆர்வலர், மரங்களை வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய சாதனை புரிந்துள்ளார்.

    வனங்களை அழிப்பதை நிறுத்தவும், புதிதாக பல மரங்களை நடுவதை ஊக்குவிக்கவும், உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெரிய மரத்தின் தண்டு பகுதியை பேட்ரீசியா 16 மணி நேரம் 6 நொடிகள் தொடர்ந்து கட்டியணைத்தபடி நின்று கின்னஸ் உலக சாதனை புரிந்தார்.


    தனது சாதனை குறித்து கூறும் போது பேட்ரீசியா தெரிவித்ததாவது:

    இந்த சாதனைக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்ந்தெடுப்பதை போன்ற அனுபவமாக இருந்தது.

    நான் கட்டியணைத்தபடி நின்ற மரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னை தேர்ந்தெடுத்ததாக உணர்கிறேன்.

    அந்த மரத்தை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்து விட்டது.

    மரங்களை காக்க வேண்டியது மனிதர்களின் கடமை. மரங்கள்தான் பருவநிலை மாற்றங்களை தடுத்து சீரான தட்பவெட்பம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.

    இந்த முயற்சியில் எனது கால்கள் வலியாலேயே என்னை கொல்வது போல் இருந்தது.

    மரத்தின் கரடுமுரடான பகுதிகளில் கைகளை அழுத்தி கொண்டிருந்ததால் கைகளும் மிகவும் வலியை தந்தன.

    இருந்தும் நான் மன உறுதியுடன் கட்டியணைத்தபடி இருந்தேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த சாதனை முயற்சியின் போது பேட்ரீசியா, மரத்திலிருந்து தனது கரங்களை எந்த நிலையிலும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் சாதனை முயற்சிக்கான நேரம் முழுவதும் நின்றபடியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பேட்ரீசியா முன்னர் இரு முறை இதே சாதனைக்கு முயற்சி செய்தார்.

    முதல் முறை அவரது முயற்சியை கேமிராவால் முழுவதுமாக பதிவு செய்ய முடியாமல் போனது.

    இரண்டாம் முறை புயல், மழை காரணமாக அவர் பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

    • அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

    மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.

    • ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர்.
    • வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கம்பாலா:

    ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பூங்காவில் அதிக அளவிலான வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

    இந்தநிலையில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த சபாரி வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக்கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் ஒரு உணவுக்கூடம் சூறையாடப்பட்டது. இங்கு இதுவரை 41 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    ×