என் மலர்

  உலகம்

  குண்டுவெடிப்பு
  X
  குண்டுவெடிப்பு

  கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குண்டுவெடிப்பில் அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார்.
  கராச்சி:

  பாகிஸ்தான் கராச்சியில் எப்போதும் பிசியாக காணப்படும் சத்தார் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும், காயமடைந்தோரில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். 

  குண்டு வெடிப்பின்போது அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதில் அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார். 

  இந்நிலையில், வெடிகுண்டானது உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்,  சைக்கிளின் கேரியரில் வைக்கப்பட்டு வெடிக்கச்  செய்யப்பட்டதாகவும் வெடிகுண்டு செயலிழப்புப் படை தெரிவித்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க 2 முதல் 2.5 கிலோ கிராம் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறி உள்ளது.
  Next Story
  ×