என் மலர்

  உலகம்

  ஐநா அமைப்பு
  X
  ஐநா அமைப்பு

  உக்ரைனில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான மக்கள் உயிரிழப்பு- ஐநா அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  கீவ்:

  உக்ரைன்  மீதான ரஷியா படையெடுப்பு 77-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது. 

  இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவா் மாடில்டா பாக்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- 

  உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறோம். ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட ஆயிரக்கணக்கில் அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்.

  மரியுபோல் நகரில் எத்தனை போ் உயிரிழந்தனா் என்பதை அங்கு நேரில் சென்று தெரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை உண்மை நிலவரத்தைவிட மிகக் குறைவாக இருக்கிறது.

  இவ்வாறு மாடில்டா பாக்னர் தெரிவித்தார்.
  Next Story
  ×