search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை போராட்டம்
    X
    இலங்கை போராட்டம்

    இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

    வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபக்சே தனது பதவியை  ராஜிநாமா செய்தார்.

    இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா்.

    இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

    இந்தநிலையில், வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பியோடிவிட்டதாக சிறைத்துறை அதிகாரி  தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×