என் மலர்

  உலகம்

  துப்பாக்கிச் சூடு
  X
  துப்பாக்கிச் சூடு

  மெக்சிகோவில் துணிகரம் - மேலும் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  மெக்சிகோ சிட்டி:

  மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

  நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற 10 மற்றும் 11வது தாக்குதல் இதுவாகும். 2022-ம் ஆண்டில் மட்டும் 11 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

  கடந்த 2000 ஆண்டு முதல் தற்போதுவரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×