search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மரியுபோலில் சாலைப் பலகைகளை அகற்றிய ரஷிய படைகள்

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 70 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்தப் போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
    6-5-2022

    19:00: உக்ரைனில் கிட்டத்தட்ட 25 மில்லியன் டன் தானியங்களை வெளியே அனுப்ப முடியாமல் முடங்கியிருப்பதாக ஐ.நா. உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்பு சவால்கள் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட கருங்கடல் துறைமுகங்களில் ஏற்றுமதி தடுக்கப்பட்டதால், தானியங்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளன என்று ஐ.நா. சபையின் உணவு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    17:30: ரஷியாவிற்கு எதிராக தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தடைகள் போதாது என்றும், ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயு மீது முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் நிதி மந்திரி செர்ஹி மார்சென்கோ கூறுகிறார்.

    17:00: எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய், இந்த மாதத்தில் 6.51 பில்லியன் டாலர் (414 பில்லியன் ரூபிள்) கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஏப்ரல் மாத வருவாய், கணித்ததைவிட 133.1 பில்லியன் ரூபிள் குறைவாக இருந்ததாக கூறி உள்ளது.

    16:30: உக்ரைனின் 45 ராணுவ இலக்குகளை தாக்கி அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. உக்ரைன் துருப்புகள், ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு வெடிமருந்து கிடங்கு ஆகிய இலக்குகளை தாக்கியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். 

    16:00: ஜி7 நாடுகளின் தலைவர்கள் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் காணொலி வாயிலாக பேச உள்ளனர்.

    15:00: உக்ரைனில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்சி ஜைத்சேவ் தெரிவித்தார். ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துவது, உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படுவதற்கு பொருந்தாது என்றும் அவர் கூறினார். 

    14.40: தென்கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் உக்ரைனிய மற்றும் ஆங்கிலத்தில் உச்சரிக்கும் சாலை போக்குவரத்துப் பலகைகளை அகற்றிவிட்டு ரஷியப் பெயர்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    10.40: மரியுபோலின் பிரமாண்டமான எஃகு ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் ரஷ்யப் படைகளுடன் போராடும் உக்ரேனியப் போராளிகள் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைனிய வீரர்கள் ரஷியாவிடம் சரணடைய மறுத்துவிட்டனர் என்றும் அவர்கள் இறுதிவரை நிற்பதாக சபதம் செய்ததாகவும் ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கூறியுள்ளார்.

    06.45: உக்ரைனில் உடனடியாக வன்முறையை நிறுத்தி, பேச்சு வாயிலாக தீர்வு காணும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ரஷ்யா போரால் உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் கண்டனம் தெரிவித்தன. அத்துடன், போரின் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

    04.15: உக்ரைன் ராணுவம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சான், மைகோலேவ் ஆகியவற்றில் சில பகுதிகளை ரஷிய படைகளிடம் இருந்து மீட்டுள்ளது.

    கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் குண்டு வீச்சை தொடர்ந்தன. நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் விநியோக இலக்குகளையும் குறிவைத்து தாக்கின. ஆனாலும் டான்பாசின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியாவின் 11 தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

    00.35: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக  பெலாரஸ் அரசும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. 

    இந்நிலையில், ரஷிய, உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். 

    எவ்வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன்- ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×