என் மலர்

  உலகம்

  அண்ணாமலை
  X
  அண்ணாமலை

  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
  யாழ்ப்பாணம்:

  இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார். 

  கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

  இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில் சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளார்.
  Next Story
  ×