search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தாய் டேல் பால்மர் மற்றும் மகள்
    X
    தாய் டேல் பால்மர் மற்றும் மகள்

    மது போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

    காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த டெல் பல்மர் என்ற 58 வயது பெண்மணி போதையில் தன் மகள் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு மே 2-ம் தேதி மது விருந்து ஒன்றில் பங்கேற்ற டெல் பல்மர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டெல் பல்மர்  வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

    அவரது காரின் முன், கெலி பெனித் என்ற அவரது மற்றொரு மகள் நிற்பதை டெல் பல்மர் கவனிக்கவில்லை. இதனால் தாய் ஓட்டிச் சென்ற கார் கெலி பெனித் மீது மோதியுள்ளது. கார் வேகமாக வந்ததால் கெலி பெனித் காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டுள்ளார். காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

    காரின் அடியில் சிக்கிய மகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கத்தியபின் தான் டெல் பல்மர் காரை நிறுத்தியுள்ளார். படுகாயமடைந்த மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மாத சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டெல் பல்மரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் டெல் பல்மர் தனது மகளிடமும், அண்டை வீட்டாரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டெல் பல்மர் கூறியுள்ளார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு அடுத்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

    Next Story
    ×