search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அர்ஜூன ரணதுங்கா, இந்திய சரக்கு கப்பல் (கோப்பு படம்)
    X
    அர்ஜூன ரணதுங்கா, இந்திய சரக்கு கப்பல் (கோப்பு படம்)

    இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா

    இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரனாக இருந்து உதவி வருவதாக, பிரதமர் மோடிக்கு, இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.  

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

    சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய  அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரனாக இருந்து உதவி வருகிறது. இலங்கைக்கு பணம் கொடுப்பதை விட நிலைமையை அவர்கள் கண்காணித்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் நடந்து வரும் பொது மக்களின் போராட்டங்களை நியாயப்படுத்திய ரணதுங்க, கொரோனா தொற்றுநோயை தடுக்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 

    பல வருடங்களாக தாங்கள் அனுபவித்த போர் சூழலை மக்கள் மீண்டும் தொடங்குவதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×