என் மலர்
உலகம்

நிலநடுக்கம்
நியூ கலிடோனியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 2.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூ கலடோனியா தீவிற்கு அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...நாங்கள் அப்பாவி அல்ல: படைகளை குறைப்பதாக ரஷியா கூறிய நிலையில் ஜெலன்ஸ்கி கருத்து
Next Story