என் மலர்

  உலகம்

  புதினுடன் காதலி அலினா கபேவா (image courtesy AFP)
  X
  புதினுடன் காதலி அலினா கபேவா (image courtesy AFP)

  புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவாரா?- சுவிட்சர்லாந்தில் புதிய கோரிக்கையால் சலசலப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.
  ‌‌ஜுரிச்:

  69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். அவரது பெயர், அலினா கபேவா (வயது 38). இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

  இவர் புதினுடனான ரகசிய காதலில் பிறந்த குழந்தைகளுடன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களையொட்டி இவர் இந்த மாத தொடக்கத்திலேயே ஒரு தனியார் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

  இந்தநிலையில் புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.

  அந்த மனுவில், தற்போது போர் நடந்து வந்தபோதும், சுவிட்சர்லாந்து புதினின் ரகசிய கூட்டாளியை தொடர்ந்து கவனித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புதினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  இந்த மனுவில் ‘சேஞ்ச்.ஆர்க்.’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்று தகவல். சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்தி அவருடன் சேர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.

  மேற்கத்திய நாடுகள் புதினின் காதலிக்கு மட்டும் பொருளாதார தடை எதையும் விதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


  Next Story
  ×