search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போரில் காயமடைந்தவர்களை மீட்கும் காட்சி
    X
    உக்ரைன் போரில் காயமடைந்தவர்களை மீட்கும் காட்சி

    #லைவ்அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: 9 மனிதாபிமான வழித்தடங்களை அமைக்க ஒப்பந்தம்

    உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 28-வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளான ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகியவற்றை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    24.03.2022

    03.20: உக்ரைனில் நான்காவது வாரமாக நடைபெறும் போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

    01.20: உக்ரைனில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷியாவை நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. பாதுகாப்பு உதவி மற்றும் உபகரணங்கள் உதவி உட்பட உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு உறுதியளித்துள்ளது.
     
    23-03-2022

    23.50: ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாளை நடைபெறும் நேட்டோ ஜி-7 மற்றும் நேட்டோ அமைப்பு ஆலோசனை கூட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    22.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    20.40:  இந்தியா வந்துள்ள கிரீஸ் வெளியுறவு மந்திரி நிகோஸ் டென்டியாஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இருவரும் விரிவாக பேசினர்.

    20.10: அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார். 

    19.50: ரஷியாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைனில் இருந்து 36 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. சபை கூறியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத கால போர் நீடித்தால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

    17.50: ஜி20 அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்கும் முயற்சியை சீனா நிராகரித்துள்ளது. ஜி20 அமைப்பு, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மன்றம், அதில் ரஷியா ஒரு முக்கியமான உறுப்பினர், மற்றொரு நாட்டை வெளியேற்ற எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என சீன வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

    17.20: ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ரஷிய தூதர் கூறினார்.  உக்ரைன் போர்  காரணமாக, ரஷியாவை ஜி20 அமைப்பில் இருந்து வெளியேற்றலாம் என்ற பரிந்துரைகளை அவர் நிராகரித்தார்.

    17.00: செர்னோபில் அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்துள்ள ரஷிய படையினர், அந்த இடத்திலுள்ள ஒரு ஆய்வகத்தை சூறையாடி அழித்துவிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    16.00: 45 ரஷிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்ற போலந்து தயாராகி வருகிறது.

    15.56: நேட்டோ அமைதிக் குழுவினரை உக்ரைனுக்கு அனுப்புவது நேரடி போருக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரித்துள்ளது.

    15.53: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுகிறார்.

    15.42: ஒன்பது மனிதாபிமான வழித்தடத்தை அமைக்க ரஷியாவுடன் உக்ரைன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் மரியுபோல் நகர் அடங்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. லுஹான்ஸ்க் பகுதி அடங்கும்

    15.39: கீவ் மாகாணத்தில் உள்ள ஸ்வியாடோஷின்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்பு, சில தனி வீடுகள், ஷாப்பின் மையம் மீது தாக்குல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    11.40:  தாங்களுக்கு வரும் உத்தரவை சிந்திக்காமல் செயல்படுத்தும் ரஷிய விமானப்படை விமானிகளுக்கு, பொதுமக்களை கொல்வது குற்றம். அதற்கு விலை கொடுப்பீர்கள் என ஜெலன்ஸ்கி செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

    11.35: மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணைய தளத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. help.gov.ua

    11.35: ரஷியாவைச் சேர்ந்த 15,300 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    11.32: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் போர் தொடுத்தபோது ஏற்பட்ட இழப்பை விட தற்போது உக்ரைன் போரில் ரஷியாவுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    11.28: புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

    09.15: அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடத்தில் மக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 11 பேருந்து ஓட்டுனர்கள், 4 மீட்புப்பணி ஊழியர்களை ரஷியப் படைகள் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    09.14: ஜி20 நாடுகளில் ரஷியா இருக்க வேண்டுமா என்று அமெரிக்காவும், அதன் மேற்கத்திய கூட்டு நாடுகளும் மதிப்பீடு செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    09.12: மரியுபோல் நகரில் உணவு, தண்ணீர், மருத்துவ உதவி கிடைக்காமல் தாக்குதலுக்கு இடையே ஒரு லட்சம் பேர்  சிக்கித் தவிப்பதாக உக்ரைன் அதிபர ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    06.50: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் இருந்து 2,389 உக்ரைன் குழந்தைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

    05.10: உக்ரைனில் போர் பகுதிகளில் உள்ள ரஷியா படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் சிரமத்தை சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    04.45: உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

    04.10: உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷியா குறிப்பிட்டுள்ளது.

    3.30: உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பால் உக்ரைன் மக்கள் 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 10,000 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    12.10: ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஐ.நா.பொதுச் செயலாளர்  ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் இடைவிடாது குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த போர் மூலம் துன்பம், அழிவு மட்டும் ஏற்படும் என்றும் போரினால் எதையும் வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.

    22-03-2022

    20.20: ரஷியா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷிய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என செர்பிய உள்துறை மந்திரி அலெக்சாண்டர் வுலின் தெரிவித்துள்ளார்.

    18.00: உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×